முதல்வர் கனவில் தங்கமணி! தூங்க முடியாத வேலுமணி! கூவத்தூரில் மண் அள்ளி போட்ட சசிகலா! வெளிவந்த ரகசியம்
நாமக்கல் : ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்போது ஆதரவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டு இருந்தபோது முதல்வர் கனவில் இருந்ததாகவும் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்ததால் அப்போது கடும் அதிருப்தியில் இருந்ததாக அவர் அணியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி வருகிறது உட்கட்சி நிகழ்வுகள்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளார் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். நீதிமன்றம் வரை சென்றும் பொதுக்குழுவை நிறுத்த முடியாத நிலையில், நினைத்ததை முடித்தார் இபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமி
இவற்றிற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கரங்களாக இருந்தவர்கள் பலர் என்றாலும், மிக முக்கியமானவர்கள் நாமக்கல் தங்கமணியும், கோவை வேலுமணியும். தற்போது மட்டுமல்ல எடப்பாடி முதல்வராக பதவியேற்றதில் இருந்தே இருவரும் அவருக்கு பல்வேறு விவகாரங்களில் உறுதுணையாக இருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி புதிய பதவிகளை அறிவித்த போது அவருக்கு மிக நெருக்கமாக இருந்த தங்கமணிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி, துணை பொது செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாமக்கல் தங்கமணி
ஆனால் அந்த பட்டியலில் தங்கமணியின் பெயர் இடம் பெறவில்லை எனவும் இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தங்கமணிக்கு பதவி வழங்க முன் வந்ததாகவும் ஆனால் அவரே வேண்டாம் என மறுத்து விட்டதாக கூறுகின்றனர் நாமக்கல் ரத்தத்தின் ரத்தங்கள். இந்நிலையில் தான் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்கப்பட்டு இருந்தபோது முதல்வர் கனவில் இருந்ததாகவும் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்ததால் அப்போது கடும் அதிருப்தியில் இருந்ததாக அவர் அணியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஓபிஎஸ் அணி
தற்போது இந்த பேச்சுதான் நாமக்கல் மட்டுமல்லாது கொங்கு மண்டல அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது. இதை கூறி இருப்பவரும் தங்கமணியின் முன்னாள் ஆதரவாளர் தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம் அந்த வகையில் கிழக்கு மாவட்ட ஓ பன்னீர்செல்வம் அதிமுக நிர்வாகிகள் கூட்டமானது விட்டமநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

மாஜி எம்.எல்.ஏ. சந்திரசேகரன்
இந்த கூட்டத்தில் சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரனும் பங்கேற்று இருந்தார். கூட்டத்தில் பேசிய அவர் ஓ.பன்னீர்செல்வத்தை புகழ்ந்து தள்ளியதோடு தங்கமணி மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதாவது மூன்று முறை முதல்வர் பதவி வழங்கப்பட்டும் அதை மீண்டும் வழங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் தனக்கு முதல்வர் பதவி அளித்த சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி என குற்றம் சாட்டினர்.

முதல்வர் கனவு
தனது பேச்சின் போது நாமக்கல் தங்கமணி மீது பகீர் குற்றச்சாட்டையும் முன் வைத்திருக்கிறார். கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கி இருந்தபோது தங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என தங்கமணியும் வேலுமணியும் எதிர்பார்த்ததாகவும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக சசிகலா அறிவித்தார். அப்போது இருவரது முகமும் இருண்டு போன நிலையில் இனி நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என சசிகலா அவர்களை தட்டிக் கொடுத்ததாகவும் எடப்பாடி பக்கம் திரும்பி பார்த்ததற்கே தன்னை தங்கமணி அதட்டியதாகவும், எப்போது ரெய்டு வரும் என தெரியாமல் தங்கமணியும் வேலுமணியும் தூங்க முடியாமல் தவிப்பதாகவும் சந்திரசேகரன் கூறியிருக்கிறார்.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications