உங்க காசுல கட்டி பேர் வைங்க.. மக்கள் பணத்தில் கட்டி திமுக தலைவர்களின் பெயர் வைப்பதா? அண்ணாமலை ஆவேசம்
நாமக்கல்: திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகர்மன்ற கூட்டரங்கில் நேற்று நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா நினைவு வளைவு என பெயர் சூட்டவும், அணுகு சாலையின் சந்திப்பில் பேராசிரியர் அன்பழகன் நினைவு வளைவு என பெயர் சூட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில், நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் வைக்கவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பு மற்றும் அணுகுசாலை சந்திப்புக்கு, அண்ணா நினைவு வளைவு அன்பழகன் நினைவு வளைவு என பெயர் வைக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும், திமுக தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் இனியும் தொடரக் கூடாது. சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்கள், தலைவர்கள் பெயரை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக தலைவர்களின் பெயர்களை வைக்க ஒரு அவசரக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பது நகைப்புக்குரியது.
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தைப் பொறுத்தவரை, பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட வீரர், தீரன் சின்னமலை அவர்களது பெயர் சூட்ட வேண்டும் என்றும், வளைவுகளுக்கு, அவரது தளபதி பொல்லான் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகர்மன்ற கூட்டத்தில், நாமக்கல் முதலைப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்திற்கு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் வைக்கவும், வெளிப்புற வட்ட சாலை சந்திப்பு மற்றும் அணுகுசாலை சந்திப்புக்கு, அண்ணா நினைவு வளைவு அன்பழகன் நினைவு வளைவு என…
— K.Annamalai (@annamalai_k) October 18, 2023
-
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications