நாமக்கல் திமுக மாநாடு! சமையல் மாஸ்டருக்கு 1 பவுனில் தங்கமோதிரம் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் சமையல் பொறுப்பை ஏற்று திறம்பட செய்து காட்டிய சமையல் கலைஞர் வெங்கடாஜலத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 1 சவரன் தங்கமோதிரம் அணிவித்து சிறப்பு செய்தார்.
இதேபோல் மாநாட்டு பந்தல் ஏற்பாடுகளை சிறப்பாக செய்த காரணத்தினால் பந்தல் ராஜா என்பவருக்கும் தங்கமோதிரம் அணிவித்து பெருமைப்படுத்தினார் முதல்வர்.
மேலும் சென்னையை சேர்ந்த ஆர்ட் டைரக்டர் செல்வத்தின் கலை நுணுக்கமான பணிகளை பாராட்டி அவருக்கு 1 சவரன் தங்க மோதிரம் அணிவித்து கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

நாமக்கல் மாநாடு
திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சிறப்பு மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த மாநாடு ஒரு நாள் மட்டுமே நடைபெற்றாலும் கூட அதற்கான முன்னேற்பாடுகள் ஒரு மாதத்துக்கும் மேலாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வந்தன. ஷிப்ட் முறையில் ஆட்கள் பணியமர்த்தப்பட்டு செட் அமைக்கும் பணிகளும், பந்தல் போடும் பணிகளும் நடைபெற்று வந்தன. வயிற்றில் நெருப்பைக் கட்டியதை போல் மாநாட்டு பணிகளை பார்த்து பார்த்து செய்து வந்தார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி.

மாநாடு சக்சஸ்
இப்படி மாதக்கணக்கில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கட்சிக்காரர்களின் உழைப்பில் உருவான நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு முழு வெற்றியடைந்துள்ளது. தனக்கு மாநாட்டு பணிகளில் பக்கபலமாக நின்று சப்போர்ட் செய்தவர்களை கவுரவப்படுத்த விரும்பிய ராஜேஷ்குமார் எம்.பி., பந்தல் போட்டவர் முதல் சமையல் செய்தவர் வரை அனைவரையும் மேடையில் ஏற்றி முதல்வர் கரங்களால் தங்கமோதிரம் அணிவிக்க வைத்தார்.

யார் யாருக்கு?
அதன்படி புதுச்சத்திரம் திமுக ஒன்றியச் செயலாளர் கவுதம், பந்தல் அமைத்த பந்தல் ராஜா, ஆர்ட் டைரக்டர் செல்வம், 10,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு காலை, மதியம் அறுசுவை உணவுடன் மாலை சிற்றூண்டியும் செய்து அசத்திய சமையல் மாஸ்டர் வெங்கடாஜலம் ஆகியோருக்கு தலா 1 சவரன் தங்க மோதிரம் அணிவித்து அவர்களை பெருமைப்படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

செங்கோல் பரிசு
இதனிடையே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளி செங்கோல் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாநாட்டு நினைவுப் பரிசாக வழங்கினார். அந்த செங்கோல் உடனடியாக முதலமைச்சரின் வாகனத்தை பின் தொடர்ந்து வரும் அவரது கான்வாய் வாகனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ












Click it and Unblock the Notifications