"பொட்டல்காட்டில்".. கணவரின் டீலிங்.. காயத்ரியை "அக்கா"ன்னு கூப்பிடுவாராம் கள்ளக்காதலன்.. ஆஹா ஹைலைட்
கணவனை கொலை செய்ய கூலிப்படை ஏவிய மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
நாமக்கல்: அக்கா, அக்கா என்று கூப்பிட்டுக் கொண்டே, கள்ளக்காதல் அட்டகாசம் நடந்துள்ளது.. 2 கள்ளக்காதல்களால், 2 குடும்பமும் சிதைந்து சின்னாபின்னமாகி உள்ளது திருச்செங்கோட்டில்.. மொத்தம் 3 பேர் சேலம் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது திருச்செங்கோட்டில்???
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால்நத்தம் ஈஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் தேவா என்கிற தேவராஜன்.. 32 வயதாகிறது.. இவர் ஒரு எலக்ட்ரீஷியன்.
இவருடைய மனைவி காயத்ரி என்கிற சரண்யாவுக்கு 28 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.. தேவராஜனிடம் அதே ஊரைச் சேர்ந்த ராஜூ என்பவர் அசிஸ்டெண்ட்டாக வேலை பார்த்து வந்தார்..

அறுபட்ட கழுத்து
கடந்த டிசம்பர் 19ம் தேதி, தேவராஜன் ராஜூவை அழைத்துக் கொண்டு, வழக்கம்போல் வேலைக்கு சென்றார்... ஆனால், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பவில்லை.. அன்றைய தினம் இரவு, ஜெகதாம்பாள் நகர் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு காலிநிலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்... தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் நேரடியாகவே ஸ்பாட்டுக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர்... தேவராஜனை உடம்பெல்லாம் படுகாயங்கள் கிடந்தன.. அவரது கழுத்து அறுபட்டிருந்தது.. உடலில் சரமாரியாக கத்தி குத்து விழுந்து, ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. அதாவது 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

விம்மி விம்மி
பிறகு சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணையையும் துவக்கினர்.. தேவராஜின் செல்போன் ஆராயப்பட்டது.. அதில், மனைவி காயத்ரி, அசிஸ்டென்ட் ராஜூ ஆகியோரின் நம்பர்கள் செல்போன்களில் பதிவாகி இருந்த நிலையில், இவர்கள் யார் யாரிடம் பேசினர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போதுதான், தேவராஜை கொன்றது காயத்ரி என்பதும், கணவனை கொல்ல கூலிப்படையையே ஏவியவர் என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்... அப்போதுதான் காயத்ரியின் கள்ளக்காதல் சமாச்சாரம் வெளியே வந்தது...

டபுள் கள்ள உறவு
விமல்குமார் என்பவருடன் காயத்ரிக்கு தொடர்பு இருந்து வந்துள்ளது... இந்த விஷயம் தேவராஜனுக்கு தெரிந்துவிட்டதால், மனைவியை கண்டித்துள்ளார்.. இதனால் எரிச்சலடைந்த காயத்ரி, விமல்குமார், அவருடைய கூட்டாளி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மூலம் தேவராஜனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விமல்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விமல்குமார் போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில், "எனக்கு தொழில்ரீதியாக தேவராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது... அதனால் அடிக்கடி அவருடைய வீட்டிற்குச் சென்று வந்தேன். அப்போதுதான் காயத்ரியுடன் உறவு ஏற்பட்டது.. ஒருவருஷமாகவே தேவராஜனுக்கு தெரியாமல், பலமுறை நாங்கள் தனிமையில் சந்தித்து நெருங்கிப் பழகி வந்தோம்...

பொட்டல் காடு
ஒருகட்டத்தில் தேவராஜனுக்கு எங்கள் விஷயம் தெரிந்ததால், காயத்ரியை கண்டித்தார்.. மேலும், அவர் குடியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு, லைன் குடியிருப்புக்கு போய்விட்டார்.. அவர் வீடு மாறினாலும் எங்கள் உறவு அப்போதும் தொடர்ந்துதான் வந்தது.. ஆனால் நாளுக்குநாள் அவரின் கண்காணிப்பு அதிகமானதால், எங்களால் பழையபடி சந்தித்துக்கொள்ள முடியவில்லை.. அதனால்தான், கொலை செய்ய முடிவு செய்தோம்.. இதற்காக கோபாலகிருஷ்ணனின் உதவியை கேட்டதற்கு 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்றார்...

இன்ஷூரன்ஸ்
அப்போது எங்களிடம் அவ்வளவு அவ்வளவு பணம் இல்லை. தேவராஜன் 10 லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததால் அவரை கொன்றுவிட்டால் அந்தப் பணம் கிடைக்கும் என்றும், அதில் இருந்து 2 லட்சம் ரூபாய் தருவதாகவும் சொன்னோம். அவரும் ஒப்புக்கொண்டார்... டிசம்பர் 19ம் தேதி எனக்குத் தெரிந்த ஒருவரின் புது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்யவேண்டும் என்று சொல்லவும், தேவராஜன் அதை நம்பி வந்தார்.. அப்போது, தேவராஜனை பொட்டல் காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று, கழுத்தை அறுத்தும் சரமாரியாகக் குத்தியும் கொலை செய்தனர். அவர் ரத்தவெள்ளத்தில் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்த பிறகே, நாங்கள் அங்கிருந்து கிளம்பி சென்றோம் என்றார். காயத்ரியை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற இருவரும் சேலம் மத்தியச் சிறையிலும் உள்ளனர்..

கண்டுக்கல கண்டுக்கல
காயத்ரியை எப்போதுமே "அக்கா" என்றுதான் விமல் குமார் கூப்பிடுவாராம்.. அதனால்தான், ஒரு வருட காலத்துக்கு இவர்கள் மீது தேவராஜூக்கு சந்தேகமே வரவில்லையாம்.. ஆனாலும் அடிக்கடி விமல்குமார் வீட்டுக்கு வந்தது, தேவராஜின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.. கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததுமே, வேறு வீட்டுக்கு தன் மனைவியுடன் குடியேறி உள்ளார் தேவராஜன்.. ஆனால், அந்த ஏரியாவில், வேறு ஒரு பெண்ணுடன் தேவராஜூக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் காயத்ரிக்கு தெரியவந்து கணவனை கேட்டுள்ளார்.. அதற்கு தேவராஜ், "உன்னை நான் கண்டுக்கல, நீயும் என்னை கண்டுக்காதே" என்று தேவராஜ் சொன்னாராம்..

டீலிங்
இந்த டீலிங் காயத்ரிக்கும் பிடித்திருந்தது.. முன்பைவிட அதிகமாக விமல் குமாருடன் ஆட்டம் போட ஆரம்பித்துள்ளார்.. இதையே சாக்காக வைத்து, தேவராஜ் வீட்டிற்கு, விமல்குமாரும் வர துவங்கி உள்ளார்.. இதைதான் விமல்குமார் தட்டிக்கேட்க போய், கூலிப்படை வைத்து கொலை செய்யும் அளவுக்கு போய்விட்டது.. குற்றவாளி காயத்ரிதான் என்பது, உடலை மீட்ட கொஙச நேரத்தில் போலீசுக்கு தெரிந்துவிட்டது என்றாலும், உடனடியாக இதை பற்றி வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் தெரியாத காயத்ரி, மருத்துவமனையில் தேவராஜின் சடலம் வைக்கப்பட்டிருந்தபோது, கதறி கதறி அழுது, மயக்கம் வருவதுபோல நடித்ததை போலீசார் ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டே நின்றார்களாம்..!!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications