அதிகாலையிலேயே அதிர்ச்சி! சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் காலமானார்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி (74) காலமானார். இன்று காலை அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார். பொன்னுசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர் பொன்னுசாமி. 74 வயதான இவர், இன்று காலை உயிரிழந்தார். இன்று காலை அவர் தனது கொல்லிமலை வீட்டில் இருந்தபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் அருகே உள்ள நாமக்கல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவர் சிகிச்சைப் பலனில்லாமல் பொன்னுசாமி உயிரிழந்தார். பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னுசாமி, பிறகு திமுகவில் இணைந்தார். அவர் 2006, 2021 சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னுசாமி மரணத்திற்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வரும் பொன்னுசாமி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று - பழங்குடியின மக்களின் நலனுக்காக உழைத்த கு.பொன்னுசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கை உணர்வோடு மக்களுக்குத் தொண்டாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவரது உடல் இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பொதுவாக எம்எல்ஏ ஒருவர் மரணமடைந்தால் அல்லது கட்சி மாறுவதால் தொகுதி காலியானால் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இருப்பினும், தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்பதால் சேந்தமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications