Omelette: தங்கம் விலை கூட குறையுது! இந்த முட்டை ரேட் மட்டும் ஏறிகிட்டே இருக்கு! இனி ஆஃப் பாயிலுக்கு ஆப்பு!
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் இனி ஹோட்டல்களில் ஆம்லெட், ஆஃப் பாயில், முட்டை தோசைகளின் விலை கூடுதலாக விற்கப்படும். அது போல் வீடுகளிலும் இனி அடிக்கடி முட்டையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1300 கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வது போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தினசரி அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது முட்டையின் கொள்முதல் விலைவிலை ரூ 6.10 காசுகளாக உயர்ந்துள்ளது.
கடந்த 7 நாட்களில் மட்டும் 35 காசுகள் உயர்ந்துள்ளது. 55 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு முட்டையின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்முதல் விலை உயர்ந்தால் நுகர்வோருக்கான விலையும் உயரும்.
தற்போது முட்டையின் விலை ரூ 7 வரை சில்லறை விலையில் விற்பனை செய்வதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இதனால் உணவகங்கள், வணிக நிறுவனங்களில் முட்டையால் செய்யப்படும் உணவுகளின் விலை உயரக் கூடும்.
இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் விரும்பி சாப்பிடும் முட்டையை வைத்து செய்யப்படும் ஃபிராங்கியின் விலையும் உயரும் நிலை உள்ளது. முட்டையின் விலை அதிகரிப்பதற்கான காரணங்கள் என பார்த்தால் வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது, பள்ளி சத்துணவு திட்டத்திற்கான முட்டை வழங்கும் பணி அதிகரிப்பு, நாட்டின் பல பகுதிகளுக்கான கொள்முதல் மற்றும் போக்குவரத்து செலவுகள், தீவன பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications