2500ல் இருந்து 12500 ஆக மாறி எப்சி கட்டணம்.. நாமக்கல் லாரி உரிமையாளர்களிடம் இருந்து பறந்த கோரிக்கை
நாமக்கல்: 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள், பஸ்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 இருந்ததை ரூ.12 ஆயிரத்து 500, 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் என தகுதிசான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று நாமக்கல் மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராசாமணி, தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறுகையில், "மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் அனைத்திற்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக கடந்த 11-ந் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது.

இது சம்பந்தமாக ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை மத்திய அரசு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த உத்தரவின்படி 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் (எப்.சி.) பெற கட்டணமாக ரூ.600 உள்ளதை தற்போது ரூ.1,000-ஆக உயர்த்தியும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் பெற கட்டணமாக ரூ.600 உள்ளதை தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும் அறிவிப்பு வெளியானது.
15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரிகள், பஸ்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 இருந்ததை ரூ.12 ஆயிரத்து 500, 20 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் என தகுதிசான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவித்துள்ளது.
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள வாகன தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை கடந்த 17-ந் தேதி முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அழிந்து வரும் மோட்டார் தொழிலை பாதுகாத்திடவும், பல லட்சக்கணக்கான லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கோடிக்கணக்கான இருசக்கர, மூன்று மற்றும் இலகுரக சக்கர வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட மத்திய அரசு அறிவித்துள்ள தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் பேசி பழைய கட்டணத்தையே வசூலிக்க, தமிழ்நாடு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு அதில் செல்லராசாமணி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் (சிம்டா) ஆலோசனை கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், "லாரிகளுக்கான தகுதிச்சான்று கட்டணம் தற்போது ரூ.850 ஆக உள்ளது. வாகனத்தின் பயன்பாட்டு காலத்தை கணக்கிட்டு இந்த கட்டணத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. அதன்படி 10 ஆண்டுகள் கடந்த லாரிகளுக்கு ரூ.12,500 தகுதிச்சான்று கட்டணமாகவும், 30 ஆண்டுகள் கடந்த வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.33 ஆயிரம் தகுதிச்சான்று கட்டணமாகவும் மத்திய அரசு நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை மாநில அரசுகள் பின்பற்றலாம். அல்லது இதனை தவிர்க்கலாம்.
அதன்படி கேரளா மாநிலத்தில் தகுதிச்சான்று கட்டண நடைமுறையை ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில அரசு இந்த கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இந்த மாநிலங்களை போன்று தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தகுதிச்சான்று கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தகுதிச்சான்று கட்டணத்தை அரசு உயர்த்தினால், லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு உள்பட தென்மாநில அரசுகள் தகுதிச்சான்று கட்டணத்தை உயர்த்த கூடாது என்று கோரிக்கை விடுக்கிறோம். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வருகிற 9-ந்தேதி முதல் தென் மாநிலங்களில் லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்" என்று கூறினார்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications