கவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை

மனைவி, குழந்தையை கொன்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை

    நாமக்கல்: கவுரிக்கு நண்பனுடன் கள்ள உறவு.. ஆத்திரம் அடைந்த கணவன், கவுரியையும், குழந்தையையும் தோட்டத்தில் வைத்து, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போனார். இப்போது, ஜாமீனில் வெளிவந்தவர், மனைவி, குழந்தையை கொன்ற அதே தோட்டத்தில் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்!

    நாமக்கல் மாவட்டம் மாணிக்கவேலூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒரு லாரி டிரைவர். கவுரி என்ற மனைவியும், 1 வயதில் புகழ்வின் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. கவுரிக்கு வயது 22! காதலித்துதான் கவுரியை கல்யாணம் செய்தார் சுரேஷ்!

    இவர்களின் ஊரின் எல்லையில் தோட்டம் இருக்கிறது. அதில்தான் விவசாயம் செய்து வந்தனர். டிரைவர் வேலைக்கு போனாலும், சுரேஷ் தோட்டத்தையும் கவனித்து வந்தார்.

    கவுரி அலறல்

    கவுரி அலறல்

    இந்நிலையில், கடந்த ஜுன் 9ம் தேதி குழந்தை, மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார் சுரேஷ். அங்கு சிறிது நேரத்தில் கவுரியின் அலறல் சத்தம் கேட்கவும், அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தோட்டத்துக்குள் நுழைந்து பார்த்தனர். அப்போது, அங்கிருந்த கிணறு பக்கத்தில், சுரேஷ், கவுரி, குழந்தை 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    சிகிச்சை

    சிகிச்சை

    கவுரியும், குழந்தையும் இறந்து விட்டனர். சுரேஷ் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால்,போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமான விசாரணையில், மனைவியின் கள்ள உறவு காரணமாகவே கொலை நடந்தது தெரியவந்தது. சுரேஷின் நண்பர் பெயர் வீரகுமார். இருவரும் ஒன்றாக சேர்ந்துதான் தண்ணி அடிப்பார்களாம்.

    வீரகுமார்

    வீரகுமார்

    அவருடன் கவுரிக்கு உறவு ஏற்பட்டுள்ளது. இதை சுரேஷ் கண்டுபிடித்து, இருவரையும் கண்டித்துள்ளர். ஆனால் அவர்கள் உறவை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால், மனைவியுடன் சேர்த்து வீரகுமாரையும் கொலை செய்ய சுரேஷ் திட்டம் போட்டுள்ளார். இதற்காக சம்பவத்தன்று தோட்டத்துக்கு தண்ணி அடிக்க வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால் வீரகுமார் உஷார் ஆகி, தான் வரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

    ஜெயில்

    ஜெயில்

    இதனால் இன்னும் ஆத்திரம் அடைந்த சுரேஷ், மனைவி, குழந்தையை தோட்டத்துக்கு அழைத்து சென்று, கத்தியால் அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சைக்கு பிறகு சுரேஷை கைது செய்து போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    தற்கொலை

    தற்கொலை

    இந்நிலையில், போன வாரம் ஜாமீனில் சுரேஷ் வெளியே வந்தார். நேராக மனைவி, குழந்தையை கொலை செய்த தோட்டத்திற்கு சென்றார். அங்கே மின்சாரத்தை தன்னுடைய உடலில் பாய்ச்சி திரும்பவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலன்றி சுரேஷ் உயிரிழந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+