ஜனநாயகன் டிக்கெட்.. ரூ.200க்கு வாங்கி ரூ.1000 வித்தாங்க! இப்போ ரூ.300க்கு ரூல்ஸ் பேசிட்டு இருக்காங்க

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ஜனநாயகன் படத்தின் டிக்கெட் ரூ.500க்கு விற்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்களிடம் தவெகவினர் வாக்குவாதம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அப்போது திரையரங்கு உரிமையாளர், ரூ.200 டிக்கெட் வாங்கி ரூ.1000க்கு விற்றார்கள்.. இப்போது வந்து 300 ரூல்ஸ் பேசுறாங்க என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தங்களிடம் ரூ.300க்கு டிக்கெட் பெற்று வெளியில் ரூ.500க்கு விற்பனை செய்வதே இவர்களின் பிளான் என்று சாடி இருக்கிறார்.

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நாளை ரிலீஸாக உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்திருப்பதால், முதல் நாளன்றே விஜய் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று தவெகவினர் தீவிரமாக உள்ளனர். அமைச்சர்களே ஜனநாயகன் முதல் காட்சியை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜனநாயகன் படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

Jananayagan

காலை 9 மணிக்கு காட்சிக்கு அனுமதி இருக்கிறதா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளி வரவில்லை. இருப்பினும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே ஜனநாயகன் திரைப்படத்தின் டிக்கெட்டுகளை திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எவ்வளவு விலைக்கு விற்றாலும் வாங்கும் மனநிலையில் தான் தவெகவினரும் இருக்கின்றனர். இதனிடையே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள திரையரங்கில் ரூ.500க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தவெகவினர் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திரையரங்கு நிர்வாகிகள், சிஎம் ஆஃபில் இருந்து கூட எங்களிடம் பேச சொல்லுங்கள்..

கட்சியில் இருந்தும் யாரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்.. ரூ.300க்கு டிக்கெட் விற்க சொன்னார்களா.. போன படத்திற்கு ரூ.200க்கு டிக்கெட் வாங்கிவிட்டு வெளியில் சென்று ரூ.1000க்கு விற்றார்கள். ஜனவரி மாதத்தில் இதே படம் ரிலீஸாகும் போது, அப்படிதான் நடந்தது. டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி எங்ககிட்ட இந்த ரேட்டுக்கு தான் டிக்கெட் விற்பனை செய்ய சொல்லி இருக்கிறார்கள்.

அப்படியில்லை என்றால், 9 மணி காட்சிக்கு இணையதளத்திலேயே டிக்கெட் விற்பனை செய்ய உத்தரவிடுங்கள்.. இவர்கள் டிக்கெட்டை ரூ.300க்கு வாங்கிவிட்டு வெளியில் சென்று ரூ.500க்கு விற்க பிளான் செய்கிறார்கள். ரூ.300க்கு விற்க ரூல்ஸ் இருக்கா.. விஜய் ரசிகர்கள் மன்றத்தில் இருந்து எங்களிடம் டிக்கெட் வாங்கி வெளியில் ரூ.1,000க்கு விற்றார்கள்.

இவர்கள் இப்போது ரசிகர் மன்றம் கிடையாது.. கட்சியாக மாறிவிட்டார்கள்.. எனக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தவெகவினர், எல்லா திரையரங்குகளிலும் ரூ.300க்கு விற்பனை செய்கிறார்கள். 5 நிமிடத்தில் டிக்கெட் இல்லை என்று அறிவிக்கிறார்கள். நாங்கள் எப்படி படம் பார்ப்பது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+