கள்ளக்குறிச்சி சம்பவம்.. மக்கள் அதிகாரம், திராவிடர் கழகத்தை தடை செய்யுங்க.. பொங்கும் அர்ஜுன் சம்பத்
நாமக்கல்: கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக மக்கள் அதிகாரம், திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் ஆக்ரோஷமாக கூறினார்.
Recommended Video
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் சுதந்திர போராட்ட தியாகி ராமலிங்கம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பவள விழா கொண்டாடனும்
தமிழ்நாடு நாள் கொண்டாடும் தமிழக அரசு சுதந்திர இந்தியா அமுத விழாவையும் கொண்டாட வேண்டும். அந்த காலத்தில் தமிழக காங்கிரஸ் என பெயர் இருந்தது. திராவிட அரசுகள் தான் தமிழ்நாடு என பெயர் வைத்ததாக கூறுகின்றனர். அதே போல தமிழக அரசு சுதந்திர தின விழாவின் 75 வது நாளை பவள விழாவாக கொண்டாட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் இடம்பபெற வேண்டும்.

மக்கள் அதிகாரம், திகவினர்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் புதிதல்ல. தமிழ்நாட்டில் இது போன்று பல இடங்களில் கல்வீசி தீ வைத்து ஸ்டெர்லைட்டை மூடினார்கள். இதே போராட்டத்தை மக்கள் அதிகாரம் திராவிட கழகத்தினர் தான் செய்தார்கள். தமிழ்நாடு வளரக்கூடாது, தொழில் வளர்ச்சி கூடாது. கல்வி வளர்ச்சி கூடாது என்பது தான் அவர்கள் நோக்கம். ஸ்ரீ பெரும்புதூரில் பாக்சான் நிறுவனத்தை மூடுவதற்கு மக்கள் அதிகாரம் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி போராடினார்கள். அப்போதைய போராட்டத்தில் திமுக எதிர்கட்சியாக இருந்தது போராட்டகாரர்களை ஆதரித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பின் முதல்வர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை அழைத்து ரூ.2 லட்சம் வழங்கினார்.

தடை செய்ய வேண்டும்
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கலவரம் சம்மந்தமாக நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த வன்முறையில் தொடர்புடைய திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் சார்ந்தவர்கள் என தெளிவு படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அதிகாரத்தையும், திராவிடர் கழகத்தையும் தடை செய்ய வேண்டும். தமிழக வளர்ச்சிக்கு எதிராக உள்ளவர்கள் என தமிழக அமைச்சர்கள் தெரிந்து கொண்டனர். மக்கள் அதிகாரம், திராவிடர் கழகத்தை திமுக கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும்.

ஜாதி கேள்வி கண்டிக்கத்தக்கது
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தை அதிமுக உட்கட்சி பிரச்சனை என கூறி திசை திருப்ப பார்க்கின்றன. இதனை திமுக கூட்டணியில் உள்ள. திமுகவினர் தான் செய்கின்றனர். 60 ஆண்டு காலத்தில் சமூக நீதி என சொல்லக்கூடிய திராவிட ஆட்சி காலத்தில் எது தாழ்ந்த ஜாதி என பெரியார் பல்கலை கழக தேர்வில் கேள்வி கேட்டு வெளியிட்டது கண்டிக்கதக்கது. இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தான் பொறுப்பு. ஏன் வாய் திறந்து பேசாமல் மெளனமாக உள்ளார்.

திமுக எம்பிக்கு கண்டனம்
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஏரியை சீரமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் நடந்து கொண்ட விதம் கண்டிக்கதக்கது. அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார். அரசு அதிகாரிகள் சங்கம், இன்ஜினியர் சங்கம் மெளமாக ஏன் இருக்கின்றன. மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசிய தருமபுரி எம்பி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரது எம்பி பதவியை பறிக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications