எப்ப பார்த்தாலும் மனைவியிடம்.. மந்திரவாதி தொல்லை.. தட்டிக் கேட்ட கணவர்.. சரமாரி குத்தி கொலை
நபரை குத்தி கொன்ற மந்திரவாதியை போலீசார் தேடி வருகிறார்கள்
நாமக்கல்: மனைவியிடம் எப்பவுமே ஆபாச பேச்சு.. பாலியல் தொல்லை தந்துள்ளார் மந்திரவாதி ஒருவர்.. இதை தட்டிக்கேட்ட கணவனை அந்த மந்திரவாதி கத்தியாலேயே குத்தி கொலை செய்துள்ளார்!
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்.. 55 வயதாகிறது.. இவர் ஒரு சென்ட்ரிங் தொழிலாளி... இவருடைய மனைவி வசந்தா.
45 வயதாகும் வசந்தா, நாச்சிப்பட்டியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கிறார்.. அதனுடன் டெய்லரிங் கடையும் சேர்த்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு 21 வயதில் மனோஜ் என்ற மகனும், 20 வயதில் உமா மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

ராம்ஜெத்மலானி
இந்நிலையில் சில காலமாக, ராமச்சந்திரன் என்பவருடன் கிருஷ்ணன் குடும்பத்துக்கு அறிமுகமாகமானது.. ராமச்சந்திரனுக்கு 30 வயது.. ராம்ஜெத்மலானி என்ற இன்னொரு பெயரும் இவருக்கு உள்ளது. கல்யாணம் ஆகவில்லை.. மாந்திரீகம், ஜோதிடம் சொல்லியும் சொல்லி வருகிறார்..

மந்திரவாதி
ஒருமுறை, தன் குடும்பத்தில் பண கஷ்டம் இருப்பதாக மந்திரவாதியிடம் கிருஷ்ணன் புலம்பி உள்ளார். இதற்கு தாம் உதவி செய்வதாக மந்திரவாதி சொல்லவும், அதற்கு கிருஷ்ணன் குடும்பத்தினர் சரி என்று சம்மதித்துள்ளனர்.. மாந்திரீகம், பரிகாரம் செய்தால், பணம் கொட்டும் என்றும் ராமச்சந்திரன் அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இதையே சாக்காக வைத்து கொண்டு அடிக்கடி வீட்டுக்கும் வர ஆரம்பித்தார் மந்திரவாதி.

ஆபாச பேச்சு
அப்போதுதான் வசந்தாவிடம் பழக்கம் அதிகமானது.. போன் நம்பரை வாங்கி வைத்து கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார்.. பிறகு ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார்.. வீட்டிற்கு வந்து பாலியல் தொல்லையும் தந்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன வசந்தா, கணவரிடம் சொன்னார். உடனே இதுகுறித்து கிருஷ்ணன் வெண்ணந்தூர் போலீசிலும் புகார் தந்தார். போலீசாரும் ராமச்சந்திரனை நேரில் அழைத்து கண்டித்து அனுப்பி வைத்தனர்.

கொலை
இது மந்திரவாதிக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது... குடிபோதையில் கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற மந்திரவாதி.. தகராறில் ஈடுபட்டார்.. இருவரும் சண்டை போட்டு கட்டி உருண்டனர்.. பிறகு திடீரென மந்திரவாதி தப்பி ஓடினார்.. இதனால் குழப்பமடைந்த கிருஷ்ணன், எங்கு போனார், வேறு எங்காவது மறைந்திருக்கிறாரா? திரும்பவும் வீட்டிற்குள் வருவாரா என்பதை தெரிந்து கொள்ள பின்னாடியே துரத்தி கொண்டு ஓடினார்.

தலைமறைவு
அப்போது அங்கேயே மறைந்திருந்த மந்திரவாதி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணனின் வயிறு, கை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அலறி துடித்த கிருஷ்ணனை, அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூரில் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications