நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய நாமக்கல்காரர்.. வருங்கால மனைவிக்காக பரிசாம்.. சாத்தியமானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தனது வருங்கால மனைவிக்காக வித்தியாசமான பரிசை வழங்கும் வகையில் நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். நிலவில் எப்படி நிலம் வாங்குவது? எப்படி சாத்தியமானது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

moon-land-man-from-namakkal-buys-one-acre-of-land-on-the-moon-for-his-future-wife

திருமணத்தின்போது கணவன், மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் பரிசுகள் வழங்குவதை நாம் பார்த்து இருப்போம். இந்த பரிசு என்னவாக இருக்கும் என்றால் நகை, வாகனம், ஹனிமூன் டிரிப் பிளான் என்று ஒவ்வொருவரின் வசதியை பொறுத்து அமையும். ஆனால் இங்கே ஒருவர் தனது வருங்கால மனைவிக்காக நிலவில் நிலம் வாங்கி உள்ளார்.

அந்த நபரின் பெயர் அசோக் சரணவன். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வசித்து வருகிறார். இவர் கட்டட பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணப்பெண்ணின் பெயர் ராதிகா வர்ஷிணி. இவர்கள் 2 பேருக்கும் வரும் 17 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் தனது மனைவிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசை வழங்க அசோக் சரவணன் நினைத்தார். அப்போது தான் அவரது உதிர்த்தது வித்தியாசமான ஐடியா. ஏன் வருங்கால மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி கொடுக்க கூடாது என்று நினைத்தார். அதன்பிறகு அவர் தனது சகோதரி உதவியுடன் நிலவில் 1 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். இதனை திருமணத்தின்போது மனைவி ராதிகா வர்ஷிணிக்கு பரிசாக அளிக்க உள்ளார்.

இதுபற்றி அவர் அசோக் சரவணன் கூறுகையில், ''என்னுடைய வருங்கால மனைவிக்கு உலகத்திலேயே யாரும் கொடுக்காத பரிசை கொடுக்க வேண்டும். அந்த எண்ணத்தில் நான் இறங்கினேன். நிலாவில் ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக பல பத்திரிகைகளை பார்த்தேன். 2018 ல் ஒருவர் நிலவில் நிலம் வாங்கியதாக கூறினார்.

என்னுடைய நண்பனின் மனைவி நிலாவிடம் பேசுவதாக கூறினார். அப்போது தான் நிலவில் இடம் வாங்க வேண்டும் என்பது தொடர்பான விஷயங்களை படித்தேன். ஆனால் 2018 ல் நிலவிலேயே நிலம் வாங்கியதை அறிந்து வியந்தேன். அப்புறம் ஏன் நாமளும் நிலவில் இடம் வாங்கக்கூடாது என்று நினைத்தேன். அப்போது சேட்டட் இன்று நிலவம் வாங்கி உள்ளேன். என்னுடைய வருங்கால மனைவி ராதிகா வர்ஷினிக்கு பரிசு கொடுக்க உள்ளேன்'' என்றார்.

தற்போது நிலவில் நிலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்து கொடுக்கின்றன. நிலவில் 'பே ஆஃப் ரெயின்போ, சீ ஆஃப் ரெயின்ஸ் என்று பல பெயர்களில் நிலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் நாமும் எளிதாக நிலவில் நிலம் வாங்கலாம். இதற்காக சில நிறுவனங்கள், இணையதளங்கள் உள்ளன. இந்தியாவை சேர்ந்த பலரும் நிலவில் 'பே ஆஃப் ரெயின்போ' ஏரியாவில் நிலம் வாங்கி உள்ளனர்.

அதன்படி ஒருவர் நிலம் வாங்க வேண்டும் என்றால் Bay of Rainbows உள்ளிட்ட பிற சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளங்களில் ஒவ்வொரு ஸ்டெப்பாக விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அதனை பின்பற்ற வேண்டும். பெயர், முகவரி உள்பட பிற விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு உரிய கட்டணததை செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வங்கி பணப்பரிமாற்றம் வழியாக கட்டணம் செலுத்தலாம்.

நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.3,068.40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 ஏக்கர் வாங்கினால் 10 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.8,276.40க்கும், 5 ஏக்கர் நிலம் வாங்கினால் 15 சதவீத தள்ளுபடியில் ரூ.13,014 க்கும், 10 ஏக்கர் வாங்கினால் 20 சதவீத தள்ளுபடியில் ரூ.24,468 க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+