கொள்கையும் இல்லை! கோட்பாடும் இல்லை! பதவி தான் முக்கியம்! திமுக நகராட்சி தலைவரின் ஆடியோ லீக்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சித் தலைவர் விஜய் கண்ணனின் ஆடியோ அவரது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது.
திமுகவிலிருந்து அதிமுகவுக்கு செல்லும் மனநிலையில் உள்ள அவர், அந்தக் கட்சிக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார் என்பதை அவரது ஆடியோவை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
கட்சியாவது பாரம்பரியமாவது சீட் தான் முக்கியம் என்றும் பார்களை கைப்பற்ற வேண்டும் என்றால் பதவி தான் முக்கியம் எனவும் அமைதிப்படை சத்யராஜ் ரேஞ்சுக்கு அவர் பேசும் பேச்சுக்கள் மூத்த அரசியல்வாதிகளையே முகம் சுளிக்க வைத்துள்ளது. இதன் மூலம் விஜய் கண்ணனிடம் கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிய வருகிறது.

கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற விஜய் கண்ணனை அப்போதைய நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தான் திமுகவுக்கு அழைத்து வந்தார். அதுமட்டுமல்ல விஜய் கண்ணனுக்கு நகர்மன்றத் தலைவர் பதவியும் வழங்கி அரசியலில் அடையாளம் காட்டினார்.
காலம் காலமாக கட்சிக்கு உழைத்த பலருக்கும் கிடைக்காத வாய்ப்பு பைனான்சியரான விஜய் கண்ணனுக்கு கிடைத்தது. கிடைத்த சேர்மன் பதவியை வைத்துக்கொண்டு மக்களிடம் நற்பெயர் எடுப்பதை விட்டுவிட்டு அடுத்தடுத்து கட்சியில் முக்கியப் பதவிக்கு காய் நகர்த்தி அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் அதிமுகவுக்கு தாவும் முடிவை எடுத்துள்ளார் விஜய் கண்ணன்.
சீட் கன்ஃபார்ம்னு சொன்னால் போய் விடுவேன் என விஜய் கண்ணன் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அதாவது அவர் வரும் சட்டமன்றத் தேர்தலிலோ, நாடாளுமன்றத் தேர்தலிலோ அதிமுகவில் சீட் எதிர்பார்க்கிறார் போல் எனத் தெரிகிறது. இதனிடையே விஜய் கண்ணனை சமாதானம் செய்யும் முயற்சியை திமுக கைவிட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications