சாலையில் தீ பற்றி எரிந்த கார்! அதிர்ஷ்டவசமாக மகனுடன் உயிர் தப்பிய ராசிபுரம் தாசில்தார்!
நாமக்கல்: நாமக்கல் அருகே தாசில்தார் பயணித்த கார் சாலையில் திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாசில்தாராக இருப்பவர் கார்த்திகேயன். இவர் சுதந்திர தினமான நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

விடுமுறை நாள் என்பதால் மகனை கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக அரசு வாகனத்தை தவிர்த்துவிட்டு, தனது சொந்த வாகனத்தில் நாமக்கல் நோக்கி பிற்பகலில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது காரின் முன் பக்கம் புகை வந்திருக்கிறது.
அத்துடன் உள்ளே இருந்த வயர்கள் உருகியதை கண்ட தாசில்தார் கார்த்திகேயன் சடாரென தனது காரை சாலையில் நிறுத்திவிட்டு மகனுடன் இறங்கிவிட்டார். அவர் இறங்கிய சில நிமிடங்களில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கூறி அவர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. வெயில் அதிகமாக இருந்த நேரத்தில் அதி வேகத்தில் காரை இயக்கியதால் இஞ்சினில் வெப்பம் தாங்காமல் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாசில்தார் கார்த்திகேயன் பயன்படுத்தி வந்தது பழைய மாடல் மாருதி 800 கார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் வாகனத்தை முறையாக பராமரிக்காவிட்டால் இது போன்ற விபரீதங்கள் நிகழக்கூடும் என்பது பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை பாடமாக இது அமைந்துள்ளது.
அதேபோல் வாகனம் கன்டிஷனாக இல்லாவிட்டால் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டியது அவசியம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications