கட்சிக்காரர் குடும்பம் கஷ்டப்படக் கூடாது! திமுக மாவட்டச் செயலாளர் செய்த காரியம்! மாதம் ரூ.6500 வட்டி
நாமக்கல்: கட்சிக்காக உழைத்து மறைந்த நிர்வாகியின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக மாதம் தோறும் வங்கியிலிருந்து ரூ.6,500 வட்டி வரும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி.
திமுகவில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் ராமசாமி. கட்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வந்ததாக கூறப்படும் இவர் அண்மையில் காலமாகிவிட்டார்.
இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி படத்திறப்பு விழா நடத்தியதோடு தனது கடமை கழிந்தது என எண்ணாமல், கட்சிக்காக உழைத்தவர் குடும்பம் எந்த சூழலிலும் கஷ்டப்படக் கூடாது என எண்ணிய திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

மறைந்த திமுக ஒன்றியச் செயலாளர் ராமசாமியின் மனைவி அன்னக்கொடிக்கு மாதம் தோறும் வங்கியிருந்து ரூ.6,500 வட்டி வரும் படி, அவரது பெயரில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் ரூ.10 லட்சத்தை Fixed Deposit செய்திருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.
கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் கட்சி கைவிடாது என்பதை உணர்த்தும் வகையிலேயே ராஜேஷ்குமார் எம்.பி. இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தை கையில் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது இந்த புதிய யோசனை மற்ற நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்திருப்பதோடு இன்னும் ஆக்டிவாக அவர்களை இயங்க வைக்கிறது என்று கூறலாம்.
இதனிடையே பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications