செம கூட்டம்.. வரவேற்ற கட்சியினர்! பதவி பெற்ற கையோடு நாமக்கலில் மாஸ் காட்டிய ராஜேஷ்குமார் எம்.பி.!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற ராஜேஷ்குமார் எம்.பி.யை ஆயிரக்கணக்கான கட்சியினர் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இதுமட்டுமின்றி சென்னையிலிருந்து நேற்றிரவு அவர் ஊர் திரும்பிய நிலையில், மலர்களை தூவி நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கின்றனர்.
ராஜேஷ்குமார் எம்.பி.க்கு இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத அவரது எதிரணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்ட திமுகவை பொறுத்தவரை நிர்வாக வசதிக்காக கிழக்கு - மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றது. அதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி. போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று முன் தினம் வெளிவந்ததும் சென்னைக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட மூத்த திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

பூ மழை

பூ மழை

இதையடுத்து உடனடியாக நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு நாமக்கல் வந்தடைந்த ராஜேஷ்குமார் எம்.பி.க்கு மாவட்ட எல்லையில் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருந்தனர் அவரது ஆதரவாளர்கள். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டச் செயலாளர்களுக்கும் இப்படியொரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்தளவுக்கு ராஜேஷ்குமார் எம்.பி. கார் மீது பூ மழை பொழிந்து அவரையே அன்பால் திக்குமுக்காட வைத்தனர்.

ராஜேஷ்குமார் எம்.பி.

ராஜேஷ்குமார் எம்.பி.

இதனிடையே இன்று நாமக்கல்லில் உள்ள அண்ணா, மற்றும் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் சென்ற ராஜேஷ்குமார் எம்.பி.க்கு, அங்கு அவரே எதிர்பார்க்காத ஆச்சரியம் காத்திருந்தது. கடல் அலைபோல் கட்டுங்கடங்காத கூட்டத்தை கண்ட அவர் ஒரு கணம் அப்படியே நெகிழ்ந்துப் போனார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாவட்டச் செயலாளரான ராஜேஷ்குமார் எம்.பி.க்கு பக்கபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞரணி

இளைஞரணி

ராஜேஷ்குமாரை பொறுத்தவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞரணியில் இருந்து மாவட்டப் பொறுப்பாளராக புரோமோஷன் செய்யப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நழுவ விடாத வகையில் சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், என அனைத்திலும் தொடர் வெற்றிகளை குவித்து தலைமையின் நன் மதிப்பை பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+