Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரிஜினல் ஆவணங்கள் எங்கே? நாமக்கல் டூவீலர் ஷோரூமில் யாரிந்த பெண்? ரூ.50,000 உத்தரவிட்ட நீதிபதி! சபாஷ்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல்லை சேர்ந்த பெண், ஆசை ஆசையாக டூவீலர் வாங்க போயிருக்கிறார்.. அங்கே ஷோ ரூமிலும், வங்கியிலும் நடந்த சம்பவம் காரணமாக, கோர்ட் வாசலை மிதிக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு என்ன தெரியுமா?

வாகனத்தின் அசல் ஆவணங்களை தராத விற்பனையாளர், வாடிக்கையாளருக்கு, 50,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Namakkal Original Documents rs50000

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன்.. இவரது மனைவி மாதேஸ்வரிக்கு 53 வயதாகிறது.. இவர் கடந்த 2021 மார்ச் மாதம், டூவீலர் வாங்குவதற்காக ஈரோட்டில் உள்ள, "லோட்டஸ் ஏஜென்சி" என்ற ஷோரூமை அணுகியிருக்கிறார்.

அசல் ஆவணங்கள் எங்கே?

அங்கு, 63,509 ரூபாய் மதிப்புள்ள, TVS ஸ்கூட்டி பெப் பிளஸ் என்ற வாகனத்தை தேர்வு செய்து, அதற்காக 10,000 ரூபாய் அட்வான்ஸ் தந்தார்.. மிச்சமுள்ள பணத்தை, ஈரோட்டில் உள்ள HDFC வங்கியில் தவணை மூலம் செலுத்த கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.. பிறகு RTO அலுவலகத்தில் டூவீலரை ரிஜிஸ்தர் செய்தபிறகு, தன்னுடைய அசல் ஆவணங்களை மாதேஸ்வரி, அந்த ஷோரூமில் கேட்டுள்ளார். அப்போது, "கடனுக்காக அசல் பதிவு சான்றிதழை வங்கியில் கொடுத்து விடுவோம்" என்று வாகன விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தன்னுடைய டூவீலருக்கான அசல், வட்டியை முழுவதுமாக செலுத்திவிட்டார் மாதேஸ்வரி.. பிறகு, வங்கிக்கு சென்று அசல் ஆவணங்களை கேட்டுள்ளார்.. அதற்கு வங்கி நிர்வாகம், அசல் ஆவணங்கள் தங்களிடம் இல்லை என்று சொல்லியிருக்கிறது. இதனால், மறுபடியும் ஷோ ரூமுக்கு சென்று, வாகன விற்பனையாளரிடம் தன்னுடைய அசல் ஆவணங்கள் எங்கே என்று கேட்டுள்ளார் மாதேஸ்வரி.

கோர்ட்டுக்கு போன மாதேஸ்வரி

அதற்கு அவர்கள், அப்போதே தாங்கள் வங்கியில் கொடுத்து விட்டோம் என்று பதிலளித்திருக்கிறார்கள்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாதேஸ்வரி, கடந்த 2024 மே மாதம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், வங்கி மற்றும் வாகன விற்பனையாளர் மீது வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கினை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், இது சம்பந்தமான தீர்ப்பை தந்துள்ளனர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு

அதில், "வாகனத்தின் அசல் ஆவணங்கள் யாரிடம் வழங்கப்பட்டது என்பதற்கான அறிக்கையை, ஆர்டிஓ சமர்ப்பித்திருக்கிறார்.. அதில், அசல் ஆவணங்களை பெற்றுக்கொண்டதாக வாகன விற்பனையாளரின் தரப்பில் கையொப்பம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அசல் பதிவு சான்றிதழை வைத்துக்கொண்டு தர மறுக்கும் விற்பனையாளரின் செயல், நேர்மையற்ற வர்த்தக நடைமுறையை நிரூபணம் செய்கிறது.

எனவே, 4 வாரத்துக்குள் அசல் ஆவணங்களை, வழக்கு தாக்கல் செய்துள்ள மாதேஸ்வரிக்கு, வாகன விற்பனையாளர் வழங்க வேண்டும். மேலும், மாதேஸ்வரிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய் வழங்க வேண்டும்" என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+