என்கவுண்டர் செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையன் ஜுமானுதீன் உடலில் இருந்த 2 குண்டுகள்! பிரேத பரிசோதனை நிறைவு
நாமக்கல்: கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளை அடித்துவிட்டு தப்பியபோது, நாமக்கல் அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மேவாட் கொள்ளையன் ஜூமானுதீனின் உடற்கூராய்வு இன்று நீதிபதி, வட்டாட்சியர் முன்னிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. கொள்ளையனின் உடலில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்தததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிய கொள்ளை கும்பலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். வெப்படை காட்டுப் பகுதியில் தப்ப முயன்ற கொள்ளையர்களில் ஒருவனை தமிழக போலீசார் சுட்டனர். துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஜூமானுதின் பலியாக, அசீர் அலி என்பவரை குண்டு காயத்துடன் போலீசார் பிடித்தனர்.

கொள்ளையர்கள் கைது: மற்ற 5 கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர். கன்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது, உள்ளே வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றும், ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கப்பட்ட 66 லட்சம் ரூபாய் இருப்பதையும் கண்டு அவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலம் மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது.
பிடிபட்ட மேவாட் கொள்ளையர்களிடம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஜூமானுதீனுக்கு உடற்கூராய்வு இன்று நடந்தது.
கொள்ளையன் உடலில் 2 குண்டுகள்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொள்ளையன் ஜூமானுதீனின் உடற்கூராய்வு குமாரபாளையம் குற்றவியல் நடுவர் மாலதி, வட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கொள்ளையன் ஜூமானுதீன் உடலில் 2 துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையன் ஜுமானுதீன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், கொள்ளையன் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஏடிஎம் கொள்ளை: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வட மாநில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு வட மாநிலத்துக்கு தப்ப முயன்றனர். குமாரபாளையம் அருகே ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் 2 பைக், ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் சந்தேகமடைந்து பைக்குகளில் விரட்டி சென்றனர்.
மடக்கிப் பிடித்தது எப்படி?: இதையடுத்து நாமக்கல் போலீசார் சேசிங் செய்து அதிவேகத்தில் சென்ற கண்டெய்னரை மடக்கி கொள்ளையர்களைப் பிடித்தனர். 4 பேரை கைது செய்த போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். ஒரு கொள்ளையனை கண்டெய்னர் லாரியில் ஒரு போலீஸ்காரரோடு வரச் செய்து முன்னும் பின்னும் போலீசார் சென்றனர்.
என்கவுண்டர் நடந்தது எப்படி?: காவல் நிலையம் செல்லும் வழியில், கண்டெய்னருக்கு உள்ளிருந்து சத்தம் வந்ததால் கண்டெய்னர் லாரியை நிறுத்தி கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்போது, போலீசாரை கொள்ளையன் ஜூமாதின் தாக்கிவிட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவரை சுட்டதில் ஜூமாதின் இறந்தார். ஒரு ஆயுதத்தால் எஸ்.ஐ-யை தாக்க முற்பட்டபோது இன்ஸ்பெக்டர் சுட்டதில் இறந்தார் ஜூமாதீன். மற்றொரு கொள்ளையன் அஸ்ரு அலிக்கு காலில் குண்டு பாய்ந்தது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications