கடன் வசூலிக்க வந்தால் செருப்பால் அடிக்கணுமா? கூட்டுறவு வங்கி ஊழியர்களை கொந்தளிக்க வைத்த பேச்சு

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : கூட்டுறவு ஊழியர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக விவசாய சங்க பிரதிநிதி எனக் கூறப்படும் ஈசன் முருகசாமி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய சங்கப்பிரதிநிதி எனக்கூறப்படும் ஈசன் முருகசாமி என்வர் சமீபத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அளித்த பேட்டியில், கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் கடன் வசூலுக்கு வந்தால் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், செருப்பைக் கழற்றி கூட்டுறவு அலுவலகத்திற்குள் வீச வேண்டுமென பேசியதாக சங்கத்தினர் கடும் குற்றம்சாட்டினார்கள்.

Remarks by a farmers association representative leave cooperative bank employees furious

மேலும் கூட்டுறவு ஊழியர்களை வன்முறைக்கு தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஈசன் முருகசாமி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி தமிழ்நாடு முழுவதுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவசங்கரன் கூறுகையில், விவசாய சங்கப் பிரதிநிதி என்ற முறையில் செயல்பட்டு வரும் ஈசன் முருகசாமி, சமீபத்தில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அளித்த பேட்டியில், கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் கடன் வசூலுக்க வந்தால் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும், செருப்பைக் கழற்றி கூட்டுறவு அலுவலகத்திற்குள் வீச வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இத்தகைய பேச்சு கூட்டுறவு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறி, சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான தவணை தேதியை நினைவூட்டுவதும், குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்துமாறு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறிவுறுத்துவதும் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள வழக்கமான பணியாகும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பயிர்க்கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தினால் மட்டுமே அதற்கான வட்டி சலுகையை அரசு வழங்கும் நடைமுறை உள்ளதாகவும், விவசாயிகள் தேவையற்ற வட்டிச்சுமைக்கு ஆளாகாமல் இருக்கவே பணியாளர்கள் நினைவூட்டல் மற்றும் வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரச் சூழலை நன்கு அறிந்தவர்கள் என்றும் சங்கத்தினர் கூறினர். இதனிடையே, ஈசன் முருகசாமி பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, சட்டரீதியான ஆதாரங்களை ஆய்வு செய்து, பொருந்தக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்க ஊழியர்கள் வலியுறுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+