ஆர்.டி.ஓ, மனைவி உடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. நாமக்கல் அருகே சோகம்!
நாமக்கல்: நாமக்கல் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆசிரியையான அவரது மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் ஆர்.டி.ஓ. ஆக உள்ள சுப்பிரமணி (40) மற்றும் ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஆக உள்ள பிரமிளா இருவரும் இன்று அதிகாலை வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தம்பதியின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஆர்.டி.ஓ, ஆசிரியையான மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இவர்களது மகள் திருமணத்தில் பெற்றோருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளதால் இருவரும் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.
ஆனால், மகன், மகள் படிப்புக்காக வாங்கிய கடன் சுமை காரணமாக சுப்பிரமணி, மனைவி பிரமிளாவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications