Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக உடனான பாஜக கூட்டணி வைத்தால் அதில் நாங்கள் இருக்க மாட்டோம்.. உறவை முறிக்கும் எஸ்டிபிஐ

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: 2026, சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் அதில் எஸ்டிபிஐ கட்சி அந்த கூட்டணியில் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி, எஸ்டிபிஐ கட்சியின் நிலைப்பாடு என்பது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியுடனும் எக்காலத்திலும் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியில் இருக்காது. பாஜக இந்த மண்ணிலே வந்துவிட கூடாது என்ற நிலைப்பாடு கொண்டுள்ள கட்சிகள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். எனவே எஸ்டிபிஐ கட்சி ஒருபோதும் பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் எந்த கட்சியினருடன் கூட்டணியில் இருக்காது என்றார்.

நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி, நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக நகர தலைவருமான கே.பி.பி.பாஸ்கர், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.

SDPI announces that we will not be part of an AIADMK-BJP alliance

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹஸ்ஸான் பைஜி, "சமூக நல்லிணக்கத்தை உயர்த்த கூடிய வகையில், இன்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2024 திருத்தப்பட்ட வக்ஃபு சட்டமானது இஸ்லாமிய சமூகத்திடம் இருக்க கூடிய ஒட்டுமொத்த சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சட்டத்தை எதிர்க்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சி சட்டரீதியான போராட்டங்களை கையில் எடுத்துள்ளது. ஒருபோதும் திருத்தப்பட்ட வக்ஃபு சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம்.

தமிழகத்தை பொருத்தவரை நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கொலைகள், கொள்ளைகள் நடைபெற்று வருகிறது. சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். கனிம வள கொள்ளை குறித்து போராடிய ஜவஹர் அலி புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்டார். வக்பு நிலங்களை பாதுகாப்பதற்காக போராடிய முன்னாள் எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். இவ்வாறான தொடர் கொலைகளை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

2026, சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் அதில் SDPI கட்சி அந்த கூட்டணியில் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எஸ்டிபிஐ கட்சியின் நிலைப்பாடு என்பது பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியுடனும் எக்காலத்திலும் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியில் இருக்காது. பாஜக இந்த மண்ணிலே வந்துவிட கூடாது என்ற நிலைப்பாடு கொண்டுள்ள கட்சிகள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். எனவே எஸ்டிபிஐ கட்சி ஒருபோதும் பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் எந்த கட்சியினருடன் கூட்டணியில் இருக்காது.

தமிழகத்தை ஆளும் கட்சியும் மத்திய அரசு அமைச்சர்களை சந்திக்கிறார்கள் எதிர்கட்சியினரும் மத்திய அமைச்சர்களை சந்தித்து உள்ளார்கள். இதை இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம், எந்த இடத்திலும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பாஜகவுடன் கூட்டணி என‌க் கூறவில்லை, அப்படி ஒரு சூழலில் நாமாக ஒரு முடிவை எடுத்து கொள்ள முடியாது. அமித்ஷாவை சந்தித்து விட்டு இபிஎஸ் அவர்கள் டெல்லியில் உள்ள அதிமுக நாடாளுமன்ற அலுவலகத்தை பார்வையிட சென்றதாக தெளிவாக கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+