திருநங்கை ரியாவுக்கு திமுக மகளிரணியில் முக்கியப் பொறுப்பு! கனிமொழி எம்.பி. வழங்கிய கிஃப்ட்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ரியாவுக்கு திமுக மகளிரணியில் மாநில சமூக வலைதள பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என மேடைகளில் மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிடாமல் கட்சிப் பதவியும் வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறது திமுக தலைமை.
சமூக வலைதளங்களில் திருநங்கை ரியா மிகவும் ஆக்டிவாக இயங்கி வரும் நிலையில் அவருக்கு இந்தப் பதவியை வழங்க பரிந்துரை செய்திருக்கிறார் கனிமொழி.

நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சீனிவாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ரியா. பெரியாரிய கொள்கைகள் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட இவர் திமுகவில் பொது உறுப்பினராக மட்டும் சேர்ந்து கட்சி நிகழ்வுகளில் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். கவுன்சிலராக பொறுப்பேற்ற திருநங்கை ரியா தனது வார்டுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

மக்கள் பணி
கழிவுநீர் கால்வாய் அடைப்பு, குடிநீர் பிரச்சனை, பாதை பிரச்சனை என தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளனவோ அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் தீவிரமாக களப்பணியாற்றி வரும் ரியா, நாமக்கல் மாவட்ட திமுகவில் எந்த கோஷ்டியிலும் சிக்கிக் கொள்ளாதவர். இதுவே இவரது வளர்ச்சிக்கு ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இவர் இயங்கி வருவதை அறிந்த கனிமொழி மகளிரணியில் சமூக வலைதள பொறுப்பாளர் என்ற பதவியை உருவாக்கி அதனை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

கேலி கிண்டல்
தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு அஞ்சி நடுங்காமல் கேலி கிண்டல்களை புறம்தள்ளி அரசியல் களத்தில் கட்சிப் பணியாற்றி வருகிறார் ரியா. தமிழகத்தின் முதல் திருநங்கை ஒன்றிய கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், திருநங்கை நல வாரியத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். திருநங்கைகள் நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் இவர் அவ்வப்போது நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கட்சிப் பதவி
திருநங்கைகளுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என மேடைகளில் மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிடாமல் கட்சிப் பதவியும் வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறது திமுக தலைமை. இதனிடையே ரியாவை போலவே வேலூர் மாநகராட்சியில் திருநங்கை கங்கா என்பவர் திமுக கவுன்சிலராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications