விஜய்க்காக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் நிற்கிறோம்.. வரிசையில் நின்று ஓட்டுபோட மாட்டோமா! தவெக தொண்டர்
நாமக்கல்: ஒருநாள் முழுக்க தவெக தலைவர் விஜய்யை பார்க்க சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் அமர்ந்திருக்கும் நாங்கள், தேர்தலின் போது ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட மாட்டோம் என்று சிலர் தப்புக் கணக்கு போவதாக தவெக பெண் தொண்டர்கள் பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
தவெக தலைவர் விஜய் 3வது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முதற்கட்ட சுற்றுப்பயணம் முடித்த நிலையில், அடுத்ததாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்த நிலையில் 3வது கட்ட சுற்றுப்பயணமாக நாமக்கல் மாவட்டத்திற்கு வருவதால், அங்கு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். அதிகாலை முதலே நாமக்கல் மாவட்டத்தில் தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்கள் குவிந்து வருவதால், காவல்துறையினரால் கட்டுக்கடங்காத அளவிற்கு கூட்டம் அதிகரித்துள்ளது. வழக்கம்போல் விஜய்யை பார்ப்பதற்காக இளைஞர்களும், பெண்களும் அதிகளவில் திரண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், அடுத்ததாக காரில் நாமக்கல் பயணிக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் விஜய்யின் வருகை குறித்த தவெக பெண் தொண்டர் ஒருவர் பேசுகையில், நாமக்கல் மாவட்டம் தான் எங்களின் சொந்த ஊர். ஏற்கனவே திருச்சி விஜய் வந்த போது, அவரை பார்க்க சென்றோம். அப்போது விஜய் பேசும் போது, மைக்கில் சத்தம் வரவில்லை.
இம்முறை விஜய்யின் பேச்சை கேட்பதற்காகவே நாமக்கல் வந்துள்ளேன். இதற்காக நேற்றிரவே நாமக்கல் வந்துவிட்டேன். கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்று சொல்கிறார்கள்.. 2026 சட்டசபைத் தேர்தல் முடிவுளின் போது அனைவருக்கும் தெரியும்.. நாங்கள் சொல்வதை விட செயலில் காட்டுவோம். இங்கு உள்ளவர்கள் அனைவரும் விஜய்க்கு வாக்களிப்போம்.
நிரந்தரமாக சிம்மாசனமிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்வார். 2026ல் தவெகவுக்கு மட்டுமே வாக்களிப்போம். கொள்கை தெரியாமல் கொள்ளையடித்துவிட்டு போறக் கட்சியல்ல நாங்கள்.. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஒருநாள் முழுக்க இங்கு விஜய்யை பார்க்க இவ்வளவு பேர் கூடி இருக்கிறோம்.. ஒரு மணி நேரம் வரிசையில் நின்று வாக்களிக்க மாட்டோமா.. இதெல்லாம் அரசியல் வாதிகளுக்கு புரியப்போவதில்லை.. கூட்டம் கூடினால் சில சேதாரங்கள் ஏற்படத்தான் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
-
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி?












Click it and Unblock the Notifications