திமுகவுக்கு ஓட்டு போட்டால் அது பாஜகவுக்கு போடுகின்ற மாதிரி.. யோசிங்க மக்களே.. நாமக்கல்லில் விஜய்
நாமக்கல்: திமுகவுக்கு ஓட்டுபோட்டால் அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசினார். நாமக்கல்லில் இன்று மக்களை சந்தித்த விஜய், "ஒன்றே ஒன்று மக்களே.. இது ரொம்ப முக்கியம்.. திமுக குடும்பம் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்து இருக்கிறார்கள்.. வெளியில் தான் இருவரும் அடித்துக் கொள்வார்கள்.. ஆனால் உள்ளுக்குள்ளே ரகசிய கூட்டணி வைத்து இருக்கிறார்கள்" என்று கூறினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் கடந்த 13 ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பினை நடத்தி வருகிறார். சனிக்கிழமை தோறும் மக்களை சந்தித்து வருகிறார். முதல் சந்திப்பாக திருச்சியில் விஜய் பரப்புரை செய்தார். தொடர்ந்து அரியலூரில் விஜய் பரப்புரை செய்தார்.

சொன்னார்கள் செய்தார்களா..
இன்று விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை செய்கிறார். இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் திருச்சியில் இருந்து நாமக்கல் வரை காரிலும் அதன்பிறகு பிரச்சார வாகனத்திலும் நாமக்கல் பிகே புதூர் பகுதியை வந்தடைந்தார். தொடர்ந்து விஜய் பேசியதாவது:-
வணக்கம் எல்லோரும் நல்லா இருக்கீங்களா.. நாமக்கல் என்றாலே முட்டை உற்பத்தி தான் . தலை நிமிர்ந்து சொல்லடா.. தமிழன் என்று சொல்லடா.. என்று சொன்ன நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த ஊரும் இது தான்.. கடந்த தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னார்கள் செய்தார்களா..
மூன்று விஷயங்களை டிவிகே செய்யாது.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் உற்பத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, முட்டை பாதுகாப்பு என்ன செய்தார்கள்.. ஆண்ட கட்சியும் சரி.. இப்போது ஆளும் கட்சியும் சரி செய்தார்களா.. இப்போ மருத்துவமனையில் கிட்னி திருட்டு.. நாமக்கல்லை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் விசைத்தறி நெசவாளர்களையே அதிகம் பாதித்துள்ளது.
நம் டிவிகே ஆட்சி அமைந்ததும் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.. முக்கியமாக இந்த மூன்று விஷயங்களை டிவிகே செய்யாது.. அது என்னவென்றால், பாசிச பாஜக அரசோடு எப்போதும் நாம் ஒத்து போக மாட்டோம்.. திமுக அரசுபோல் அன்டர்கிரவுண்ட் டீலிங் செய்துகொள்ள மாட்டோம்..
அம்மா.. அம்மா என்று சொல்லிவிட்டு
மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா.. அம்மா.. அம்மா என்று சொல்லிவிட்டு அவர்கள் சொன்னதை மறந்துவிட்டு, இப்போது தமிழகர்களின் நலனுக்காக என்று சொல்லி பொருந்தாத கூட்டணி வைத்திருக்கின்றார்களே அவர்களை போல் நாம் செய்ய மாட்டோம்..
பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி..
தமிழகத்திற்கு தேவையானதை செய்ததா இந்த பாஜக அரசு.. நீட் தேர்வை ரத்து செய்துவிட்டாங்களா.. தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை தந்துவிட்டார்களா.. ஒன்றே ஒன்று மக்களே.. இது ரொம்ப முக்கியம்.. திமுக குடும்பம் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்து இருக்கிறார்கள்.. திமுகவுக்கு ஓட்டுபோட்டால் அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி..
வெளியில் தான் இருவரும் அடித்துக் கொள்வார்கள்.. ஆனால் உள்ளுக்குள்ளே ரகசிய கூட்டணி வைத்து இருக்கிறார்கள். வேண்டாம் மக்களே, யோசிங்க.. அதனால் திரும்பவும் சொல்கிறேன். 2026-ல் ஒன்று தவெக இன்னொன்று திமுக.. இரண்டே இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டியே.. அது ஒன்னு டிவிகே, இன்னொன்று திமுக.. வெற்றி நிச்சயம்.. நல்லதே நடக்கும்.. இவ்வாறு அவர் பேசினார்.











Click it and Unblock the Notifications