இதய பிரச்சினையால் தவிக்கும் 2 மாத குழந்தை.. உங்கள் முயற்சியால் காப்பாற்ற முடியும்.. உதவுங்கள் ப்ளீஸ்
சென்னை: பிறந்து வெறும் இரண்டு மாதங்களே ஆன குழந்தை வேதாந்த்திற்கு மோசமான இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய அவனுக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
குழந்தைகள் எப்போதும் நமது வாழ்க்கையை அழகாக்கிவிடும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கூட குழந்தைகளைப் பார்த்தாலே பிரச்சினைகளை மறந்துவிடுவோம். நமது மனதில் ஒரு புத்துணர்ச்சி உருவாகும்.
ஆனால், பேபி வேதாந்த்பெற்றோருக்கு அப்படியில்லை. தங்கள் குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இவர்கள் ஒவ்வொரு நொடியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த குழந்தை வேதாந்த் பிறந்து வெறும் 2 மாதங்கள் மட்டுமே ஆகிறது. மணலியில் வசிக்கும் சுந்தர் மற்றும் ஹரிணி தம்பதிக்கு முதல் குழந்தையாகப் பிறந்தவர் தான் வேதாந்த்.. சுந்தர் மணலியில் இருக்கும் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார்.
ஏழ்மை நிலையில் இருந்தாலும் வேதாந்த் பிறந்த போது இவர்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை..
ஹரிணிக்கு RSRM மருத்துவமனையில் இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளுமே பிறந்தவுடன் 10 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டனர். அப்போது இரட்டை குழந்தைகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.
இதனால் இரட்டை குழந்தைகளை டிஸ்சார்ஜ் செய்தார்கள். அதன்பிறகு பெற்றோர்கள் வாரவாரம் நார்மல் செக் அப்பிற்கு குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்படியொரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது தான், வேதாந்திற்கு மூச்சுத் திணறல் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், உயர் சிகிச்சை தேவைப்படுவதால், மருத்துவர்கள் அவர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

குழந்தைக்குப் பிறக்கும் போதே இதயத்தில் பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அந்த குழந்தைக்குச் சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இப்போது அந்த குழந்தை அறுவை சிகிச்சைக்காக MIOT மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வேதாந்திற்கு நுரையீரல் பிரச்சினை (Total Anomalous Pulmonary Venous connection) - டூயல் டிரைனேஜ் ( Dual drainage) - கார்டியாக் & சூப்பர் கார்டியாக், சிறிய ஏஎஸ்டி வலமிருந்து இடப்புறம், இதய செயலிழப்பு ஆபத்து ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.
TAPVC பிரச்சினையைச் சரி செய்ய எவ்வளவு சீக்கிரம் முடியுமோ எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை, அதன் பிறகு ஐசியு, ஹாஸ்பிடலில் தங்க, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய டெஸ்டிங் என அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.3,60,000 செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏழைக் குடும்பம் என்பதால் வேதாந்த் குடும்பத்தினரால் அவ்வளவு பெரிய தொகையை உடனடியாக திரட்ட முடியவில்லை. நீங்கள் நினைத்தால் இந்த குழந்தைக்கு உதவி செய்ய முடியும். உங்கள் உதவியால் ஆப்ரேஷன் செய்தால் குழந்தை பிழைக்கும்.. இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவியைச் செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்து, இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவுங்க ப்ளீஸ்.
குழந்தைக்கு உதவி செய்ய Click Here
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!















Click it and Unblock the Notifications