New Pope: "லியோன் XIV" - புதிய போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர்
வாடிகன்: வாடிகனில் புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வெள்ளை நிற புகை வெளியேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக புதிய போர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போப் லியோன் XIV என்று போப்பாண்டவரின் பெயரை ஏற்றுக் கொண்டார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நலக் குறைவாலும், வயது முதிர்வு காரணமாகவும் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார்.

புனித மேரி பசிலிக்காவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், வாடிகனில் 9 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் அதற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 250 கார்டினல்கள் பங்கேற்றனர். ஆனால், முதல் நாளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கார்டினல்கள் எழுதி வைத்திருக்கும் காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலயத்தின் சிம்னி வழியாக வெண்புகை வெளியேற்றப்படுவதன் மூலம் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்றும், கரும்புகை வெளியேற்றப்படுவதன் மூலம் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதையும் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படும்.
இந்நிலையில், வாடிகனில் உள்ள சிஸ்டின் தேவாலயத்தின் சிம்னியில் இருந்து சற்று முன்னர் வெண்புகை வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் புதிய போப்பாண்டவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய போப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரெஞ்சு கார்டினல் டொமினிக் மம்பெர்டி, ஹேபமஸ் பாப்பம் (நமக்கு ஒரு போப் கிடைத்துவிட்டார்) என்ற லத்தின் வார்த்தைகளுடன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு புதிய போப்பாண்டவரான ராபர்ட் பிரிவோஸ்டின் தேர்வை அறிவித்தார்.
யார் இந்த ராபர்ட் பிரிவோஸ்ட்?
சிகாகோவைச் சேர்ந்தவர் ராபர்ட் பிரிவோஸ்ட். 69 வயதானவர். இவர் பெரு நாட்டில் உள்ள கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டார். தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை அப்பணிகளிலேயே கழித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் கார்டினல் ஆனார். பொதுவெளியில் அரிதாக மட்டுமே பேசியுள்ள இவர், சில ஊடகங்களுக்கு மட்டும் நேர்காணல் வழங்கியுள்ளார். ராபர்ட் பிரிவோஸ்ட் 267 ஆவது கத்தோலிக்க போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் அமெரிக்க போப்பாண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications