அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி.. டிரம்ப் முடிவால் சிக்கல்
நியூயார்க்: அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாய்களை திருடுவது போல அமெரிக்க தேசத்தின் திரைப்பட தயாரிப்புத் தொழிலினை மற்ற நாடுகள் திருடியிருக்கின்றன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியா தான். ஏனெனில், அங்கு பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநர் ஆட்சி பொறுப்பில் உள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் டிரம்ப் தனது பதிவில், திரைப்படம் எடுப்பது தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க தேசத்துக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்திருக்கிறேன். அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றுவேன்" என்று டிரம்ப் தனது பதிவில் உறுதி தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் குழப்பம்
டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நெட்ஃபிளிக்ஸ் போன்ற சர்வதேச அளவில் ஸ்ட்ரீமிங் சேவைகள் அளித்து வரும் நிறுவனங்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பை அமெரிக்காவே நினைத்தாலும் செயல்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.. ஏனெனில் திரைப்படத் துறை பெரும்பாலும் சர்வதேச அளவில் இருக்கிறது.. தடையற்றதாக இருக்கிறது. எனவே இந்த 100 சதவீதம் வரி என்ற தண்டனை நடவடிக்கையைச் செயல்படுத்துவது நடைமுறையில் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக இருக்கும்.
இந்திய திரைப்படத்துறைக்கு பாதிப்பு
அதேநேரம் உலகின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நாடான இந்தியத் திரைப்படத் துறையை அமெரிக்காவின் அறிவிப்பு நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள்.ஏனெனில், இந்தியாவின் வருவாயில் கணிசமான பகுதி அமெரிக்கச் சந்தையில் இருந்தும், ஸ்ட்ரீமிங் சேவைகள் மூலமாகவும் கிடைத்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்பட உலகின் பிற பெரிய திரைப்படத் தயாரிப்பு நாடுகளும் அமெரிக்காவின் வரியினால் பாதிக்கப்படும்.
அரசியல் கருத்து
அதேநேரம், அமெரிக்க அதிபர் உதவ முயற்சிப்பதாகக் கூறும் ஹாலிவுட் கூட இந்த முடிவால் நிச்சயம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ட்ரம்ப்பும் வழக்கமான அரசியல்வாதி போல், வெளிப்படையாக அரசியல் சாயம் பூசி, "கலிஃபோர்னியா, அதன் பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநரால், பாதிக்கப்பட்டுள்ளது " என்று கூறியதன் பின்னணியை பார்த்தோம் என்றால், அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்புகள் அமெரிக்காவைவிட்டே போய்விட்டது உண்மை தான்.
சாத்தியமே இல்லை
தற்போதைய நிலையில் சினிமா துறை வல்லுநர்கள், அமெரிக்கத் திரைப்பட வணிகம் நெருக்கடியில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள், ஆனாலும், 100 சதவீதம் வரியை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பது தெரியவில்லை என்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இன்ஃபேமஸ் கோகனட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜார்ஜ் கோஷி கூறுகையில் "திரைப்படங்கள் பல்வேறு இடங்களிலும், நாடுகளிலும் உருவாக்கப்படும் உலகத்தில் இப்போது நாம் வசிக்கிறோம். ஏனெனில் ஒரு ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படத்தின் Special Effects களை இந்தியாவில் உள்ள ஒரு ஸ்டுடியோவுக்கு அவுட்சோர்ஸ் செய்ய முடியும். அதேபோல் கலர் கரெக்ஷனை இன்னொரு நாட்டிலும், ஆடியோ-வீடியோவை வேறுஒரு நாட்டிலும் செய்யலாம். இது மிகவும் சிக்கலானது. பல விஷயம் எங்கு நடந்தது என்றே தெரியாத அளவிற்கு இருக்கும்" என்றார்.
இந்தியாவிற்கு இரண்டு பாதிப்பு
எனினும் இந்தத் திட்டத்தால் இந்தியா இரண்டு வழிகளில் பாதிக்கப்படும் என்கிறார்கள். இந்தியப் படங்களுக்கு வட அமெரிக்கச் சந்தையிலிருந்து ஆண்டுதோறும் தோராயமாக 100 மில்லியன் டாலர் முதல் 150 மில்லியன் டாலர் வரை வருவாய் கிடைப்பதாக இந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்த வருவாய் திரையரங்க வசூல், டிஜிட்டல், செயற்கைக்கோள் மற்றும் பிற விநியோக உரிமைகள் மூலம் கிடைக்கிறது. முக்கிய இந்தி மற்றும் தெலுங்கு பிளாக்பஸ்டர் படங்கள் அமெரிக்கச் சந்தையிலிருந்து 10 டாலர் மில்லியனுக்கும் அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.
விலை உயரும்
இந்த வரி விதிப்பால், அமெரிக்காவில் (இந்தியர்கள்) டிக்கெட்டுகளுக்குத் தற்போதைய 20 டாலர் ஐ விட இரண்டு மடங்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்கிறார்கள். மேலும் ஸ்ட்ரீமிங் சந்தா சேவைகளுக்கான விலையும் உயரும். ஆனால் இந்த விலை உயர்வு தேவையைக் குறைத்து, தயாரிப்பாளர்களைக் குறைந்த விலைக்கு விற்கும்படி கட்டாயப்படுத்தப்பட வாய்ப்பும் உள்ளது.
இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ்
விஎப்எக்ஸ் & அனிமேஷன் போன்ற அவுட்சோர்சிங் பணிகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஹாலிவுட் ஸ்டுடியோக்களான டிஸ்னி, ட்ரீம்வொர்க்ஸ் மற்றும் பிக்ஸார் ஆகியவை அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) வேலைகளின் ஒரு பகுதியைப் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள ஸ்டுடியோக்களுக்கு அவுட்சோர்ஸ் செய்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் வெளியான, தி லயன் கிங், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், டியூன், ஜங்கிள் புக், மற்றும் இன்டர்ஸ்டெல்லார் போன்ற படங்களின் போஸ்ட் புரொக்டசன் வேலைகளை இந்திய ஸ்டுடியோக்களில் தான் நடந்தன.
இந்திய அனிமேஷன் துறை
இந்தியாவில் உள்ள அனிமேஷன் ஸ்டுடியோக்கள் டிஸ்னி மற்றும் நிக்கலோடியோன் போன்ற சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்களுக்காகத் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கி வருகின்றன. இந்தியாவின் அனிமேஷன் மற்றும் VFX துறையை பொறுத்தவரை 2023ம் ஆண்டு 1.3 பில்லியன் டாலரில் இருந்தது, இது 2026 ஆம் ஆண்டிற்குள் 2.2 பில்லியன் டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட்டிற்கு பாதிப்பு
முன்னதாக வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு வரி விதிக்கும் யோசனையை ட்ரம்ப் முதன்முதலில் மே மாதம் வெளியிட்டார். திரைப்படத் தயாரிப்பை வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்வது நமது தேசத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்று கூறினார். ட்ரம்ப் இப்படி செய்தால், பிற நாடுகளும் அமெரிக்கப் படங்களுக்கு அதிக வரியை விதிக்க வாய்ப்பு உள்ளது. இது ஹாலிவுட்டுக்கு பேரழிவை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ஹாலிவுட்டின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 70 சதவீதத்திற்கும் மேல் சர்வதேசச் சந்தைகளிலிருந்தே வருகிறது. 2024 ஆம் ஆண்டில் ஹாலிவுட்டின் மொத்த வருவாய் சுமார் 30 பில்லியன் டாலராக இருந்தது என்கிறார்கள்.
-
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
'நேட்டோ' வெறும் காகித புலி! நாங்க இல்லாம ஒன்னுமே இல்லை.. கடுமையாக சாடிய டிரம்ப்! -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
முரண்டு பிடிக்கும் டிரம்ப்.. எதிர்பாராத நேரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா அனுப்பிய டீல்? என்ன மேட்டர்












Click it and Unblock the Notifications