Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பேராபத்து".. இன்னும் 60 நாள்தான்.. எல்லாரும் அழிய போறாங்க.. சுனாமி வரப்போகுதாமே.. பகீர் கணிப்பு

60 நாட்களுக்குள் உலகப்போர் நடந்து மிகப்பெரிய மரணங்கள் ஏற்பட போகிறதாம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வரும் டிசம்பர் மாதம், மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்று கணித்துள்ள ஒரு தகவல், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பொதுவாக வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே ஒருசிலர் கணித்து சொல்லி வருகிறார்கள்.. இதில் முதன்மையானவர் பாபா வாங்கே என்பவர். இவர் கணித்து வைத்துவிட்டு போன எத்தனையோ விஷயங்கள் அச்சுஅசலாக அப்படியே நடந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான், 2 மாதங்களுக்கு முன்பு, கியூபாவை சேர்ந்த மோனி விடன்ட்டே என்ற பெண்ணும், ஒரு பகீரை கிளப்பி விட்டார்.. இந்த பெண்மணி இதுவரை என்னவெல்லாம் கணித்துசொன்னாரோ, அது பெரும்பாலும் அப்படியே நடந்துள்ளது.

 3ம் உலக போர்

3ம் உலக போர்

அந்தவகையில், மீண்டும் மூன்றாம் உலகப்போர் குறித்து தன்னுடைய கணிப்பை வெளியிட்டிருந்தார்.. மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறதாம். 9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாவாகத்தான் இருக்கும் என்றும் உறுதியாக சொல்கிறார்... சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன்காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும்.. இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்" என்று மோனியின் கணிப்பானது, உலக நாடுகளை கலங்கடித்து கொண்டிருக்கிறது..

பாபாவாங்கா

பாபாவாங்கா

இந்த பீதியே இன்னும் அடங்கவில்லை.. அதற்குள் இன்னொரு பகீர் கிளம்பி விட்டது.. நாஸ்டர்டாமஸ் என்பவர் எழுதி வைத்த கணிப்புதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. உலகம் முடியும் வரைக்குமான தன்னுடைய கணிப்புகளை எழுதி வைத்தவர்தான் இந்த நாஸ்டர்டாம்ஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.. இவர் என்ன சொன்னாலும், அதை உலகம் அப்படியே உற்று கவனிக்கும்.. 465 வருஷங்களுக்கு முன்பு தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.. உலகில் எப்போது, என்னென்ன நடக்க போகின்றன என்பதை குறிப்பிட்டுள்ளார்.. அதுவும் அவைகளை எல்லாம் கவிதையிலேயே எழுதி வைத்துவிட்டு போயுள்ளார்..

 டயானா + இந்திரா

டயானா + இந்திரா

அமெரிக்கா இரட்டை கோபுரத் தாக்குதல், ஜான் கென்னடி கொலை, ஹிட்லரின் எழுச்சி, மரணம், டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது இப்படி ஏகப்பட்ட விஷயங்களை மிக மிக துல்லியமாக கணித்து சொல்லியவர் இவர்தான். நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றிகூட இவர் எழுதி வைத்திருக்கிறார்.. அதாவது, "3 பக்கமும் கடல் சூழ்ந்த நாட்டில், பலத்த அதிகாரம்கொண்ட பெண் ஒருவர், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால், அதிகாரத்தை மறுபடியும் பெறுவார்... ஆனால், தன்னுடைய சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே தன்னுடைய 67-ம் வயதில் கொல்லப்படுவார்...நூற்றாண்டு முடிய 16 வருடங்கள் இருக்கும்போது இது நடக்கும்"

 விண் கற்கள்

விண் கற்கள்

நாஸ்ட்ர்டாம்ஸ் இப்படி கணித்து எழுதி வைத்திருந்ததை கேள்விப்பட்டு, இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே அதிர்ந்துதான் போனது.. இதோ, நாஸ்ட்ராடாமஸ் கணித்த இன்னொரு கணிப்பு வட்டமடித்து வருகிறது.. 2022ல் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்க போகிறதாம்.. முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கள் பூமியை தாக்கும் என்றும், இதனால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும் என்றும் எழுதி வைத்துள்ளாராம்..

 60+ நாட்கள்

60+ நாட்கள்

குறிப்பாக, "2022ம் ஆண்டில், வானத்தில் அரிய நிகழ்வு ஒன்று நடக்க போகிறது, ஒரு கிரகத்தில் இருந்து உடையும் சிறுகோள், அதிக வேகத்தில் வந்து பூமியை அடுத்த வருடம் தாக்க உள்ளது.. அந்த சிறுகோள், பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழும், அந்த சிறுகோளின் அளவு மிகப்பெரியதாக இருக்கும் என்பதால் கடலில் வலுவான அலைகள் எழுந்து சுனாமியை உருவாக்கும், அதனால், கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளின் கரையோரப் பகுதி முற்றிலுமாக அழிந்து, லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழப்பார்கள்" என்று கணித்துள்ளார்.

 பஞ்சம் + ஆபத்து

பஞ்சம் + ஆபத்து

மேலும், 2002ல் ஏற்பட்டதுபோலவே, மிகப்பெரிய அளவில் உலக நாடுகளில் பண வீக்கம் ஏற்பட்டு, பஞ்சமும் வாட்ட போகிறது, அமெரிக்க டாலரின் மதிப்பு இன்னும் வீழ்ச்சியடையும், இயற்கை சீற்றத்திற்கு பிரான்ஸ் நாடு ஆளாகப்போகிறது.. புயல், வெள்ளம் ஏற்பட்டு, மிகப்பெரிய அழிவு ஏற்படும் என்றெல்லாம் கூட கணித்து வைத்துள்ளார்.. இவை எல்லாவற்றையும் மிக முக்கியமான கணிப்புதான் இப்போது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. அடுத்த 60 நாட்களுக்குள் பெரிய ஆபத்துகள் நமக்கு வரப்போகிறதாம். இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அணு ஆயுதம் வெடிக்கும் என்று நாஸ்ட்ர்டாமஸ் கணித்து சொல்லி, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்..

டேஞ்சர்

டேஞ்சர்

இந்த அணு ஆயுத போர் வேறுபாட்டால், புவி வெப்பமயமாதல் நிகழும்.. மில்லியன்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள்... இறுதியில், கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும்... இந்த 3-ம் உலகப்போர் சுமார் 7 மாதங்கள் நீடிக்கும்... இதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். பூமியின் வரைபடத்தில் இருக்கும் பல நாடுகள் காணாமல் போய்விடும்.. இந்த 2022ம் ஆண்டு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும்.. பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்... இதிலும் பலர் இறந்துவிடுவார்கள்.. அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை சீற்றம் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கிவிடும்.. அப்போது, அந்த போர்கள் திடீரென நின்றுவிடும்...

 புதிய பூமி

புதிய பூமி

3 நாட்களுக்கு பிறகு, புதிய உலகம் பிறக்கும்.. அந்த உலகம், கற்காலத்தில் இருந்து வாழ்க்கையை மறுபடியும் தொடங்கும்.. மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் இந்த ஆண்டில் பல நாடுகளுக்கு இடையே போர் நடப்பதுடன், ஏராளமானோர் இறக்கவும் நேரிடுமாம். உலகிலுள்ள கடல்களின் நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் பல தீவுகளும் சிறிய நாடுகளும் நீரில் மூழ்கும்அதாவது எல்லா நவீனத்துவமும் மறைந்துபோய், மீண்டும் கற்காலத்தில் இருந்து புதிய வாழ்வை மனிதகுலம் ஆரம்பிக்கும்..

கதிகலங்கிடுச்சே

கதிகலங்கிடுச்சே

2022 ஆம் ஆண்டில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கணினிகள் மற்றும் ரோபோக்களே மனிதகுலத்திற்கு எதிரியாக மாறும். மனிதர்களின் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ரோபோக்கள் கட்டுப்பாடற்றதாக மாறி ஒட்டுமொத்த மனித இனத்தையும் பூமியில் இருந்து அழித்துவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இப்படி ஒரு கணிப்பை கேள்விப்பட்டு, உலக மக்கள் அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்துள்ளனர்.. ஏற்கனவே டிசம்பர் மாதம் வந்தாலே நமக்கெல்லாம் பீதி கிளம்பிவிடும்.. இந்த நாஸ்ட்ர்டாம்ஸ் இப்படியெல்லாம் எழுதிவைத்து போயுள்ளாரே.. என்னாக போகுதோ?!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+