"லே ஆஃப்".. கூகுளே பண்ணிடுச்சு.. நாங்க மட்டும் என்ன.. ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி.. ஷாக் தந்த யாஹு
நிதிச்சுமை காரணமாக இந்த லே ஆஃப் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லையென யாஹு சிஇஓ கூறியுள்ளார்.
நியூயார்க்: கூகுள், மெட்டா, டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கணிசமான அளவில் வெளியேற்றியுள்ள நிலையில், தற்போது இந்த வரிசையில் 'யாஹு'வும் இணைந்திருக்கிறது. இந்நிறுவனத்திலிருந்து விரைவில் 20% ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக வெளியேறியது, நிதி நிலைமை சீரானது போன்ற செய்திகள் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என பலருக்கு நம்பிக்கை கொடுத்தது. ஆனால் டெக் ஊழியர்களுக்கு இது கஷ்ட காலமாக அமைந்திருக்கிறது. ஆண்டின் தொடக்கத்திற்கு முன்னரே கடந்த நவம்பரில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான 'மெட்டா' தனது நிறுவனத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றியது. இந்நிறுவனம் தொடங்கி 18 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இதுவரை இவ்வளவு அதிகமான அளவில் பணிநீக்கத்தை நிறுவனம் மேற்கொண்டதில்லை.
இதனையடுத்து டிவிட்டர், கூகுள், ஐபிஎம் என டெக் ஜெயன்ட்கள் தங்கள் ஊழியர்களை கொத்து கொத்தாக வெளியேற்றியது. கூகுளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் சோக கதைகளை இதே கூகுளில் எழுத தொடங்கினர். மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து H-1B விசாவுடன் அமெரிக்காவில் குடியேறியிருந்தவர்களுக்கும் 'லே ஆஃப்' கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த விசாவின் கீழ் அமெரிக்காவில் வசிப்பவர்கள் வேலையை இழந்துவிட்டால் உடனடியாக மாற்று வேலை தேட வேண்டும். அவ்வாறு கிடைக்கவில்லையெனில் 6 மாதங்களுக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

20 சதவிகித ஊழியர்கள்
இதனால் இந்தியாவை சேர்ந்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டனர். வழக்கமாக ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலையை இழந்துவிட்டால் மற்றொரு நிறுவனத்தில் வேலையை தேடிக்கொள்ளலாம். ஆனால், இந்த முறை மொத்த டெக் நிறுவனங்களுமே லே ஆஃபில் இறங்கியுள்ளதால் புதிய வேலை கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், கூகுள், மெட்டாவையடுத்து தற்போது 'யாஹு' நிறுவனமும் தனது லே ஆஃப் படலத்தை தொடங்கி இருக்கிறது. ஒட்டு மொத்த ஊழியர்களில் 20% அளவுக்கு லே ஆஃப் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது சுமார் 1,600க்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

விளக்கம்
விளம்பர தொழில்நுட்ப பிரிவில்தான் இந்த பணிநீக்கம் அதிக அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மற்ற பிரிவுகளை விட இந்த பிரிவில் சுமார் 50% ஊழியர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிறுவனத்தின் சிஇஓ ஜிம் லான்சோன், "நிதிச்சுமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இது நாங்கள் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியில்லை என்பதால்தான் லே ஆஃபை கையில் எடுத்திருக்கிறோம். இது Yahoo for Business விளம்பரப் பிரிவில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

லாபம்
இவர் கூறியதை போல யாஹு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல இது ஆண்டுக்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.66 ஆயிரம் கோடி) வரையில் லாபத்தை ஈட்டுகிறது. எனவே, நிறுவனத்தின் லாபத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த பணிநீக்கத்தை யாஹு கையில் எடுத்திருக்கலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இன்னும் ஒரு சில நாட்களில் சுமார் 12 சதவிகிதம் என 1000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். மீதமுள்ள 8% ஊழியர்கள் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியேற்றப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தியர்கள்
தற்போது வரை அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 30-40 சதவிகிதமானோர் இந்தியாவை சேர்ந்தவர்களாவார்கள். இவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில், தற்போது யாஹு நிறுவனத்திலிருந்தும் இந்தியாவை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட இருப்பதால் அமெரிக்காவில் வேலையில்லாமல் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications