Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸ்கர் விருது 2026 வென்றவர்கள்.. சின்னர்ஸ் அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் படங்களுக்கு விருது

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: திரையுலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவின் அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் மூலம் வழங்கப்படுவது வழக்கம். ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று ( காலை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் , ஃபிராங்கன்ஸ்டைன் திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

திரையுலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுத் திருவிழா (98-வது அகாடமி விருதுகள்), அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற 'டால்பி' திரையரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவை, தனது நையாண்டிப் பேச்சால் அரங்கை அதிரவைக்கும் கோனன் ஓ'பிரையன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Oscar film award

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், கலைக்கான இந்த விழாவில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதற்காக லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினருக்கு மத்தியில், சிவப்பு கம்பள வரவேற்பு மின்னொளியில் ஜொலித்தது.

விருதுகளை அள்ளிய முக்கிய படங்கள் விவரம்

இந்த ஆண்டு ஆஸ்கர் மேடையில் 'சின்னர்ஸ்' (Sinners) மற்றும் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) ஆகிய படங்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளன.

சிறந்த அசல் திரைக்கதை

சுமார் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்த 'சின்னர்ஸ்' படத்திற்காக, இயக்குநர் ரயான் கூக்ளர் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதைத் தட்டிச் சென்றார்.

அவதார் மேஜிக்

பிரம்மாண்டத்திற்குப் பெயர் போன ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் எதிர்பார்த்தபடியே 'சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்' விருதை வென்றது. ஜோ லெட்டெரி தலைமையிலான குழுவினர் மேடையில் இந்த விருதைப் பெற்றபோது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

நடிப்புக்கான அங்கீகாரம்

சிறந்த துணை நடிகருக்கான விருதை 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்திய சீன் பென் வென்றார். அதேபோல், 'வெப்பன்ஸ்' படத்தில் நடித்த ஏமி மேடிகன் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்று நெகிழ்ச்சியடைந்தார்.

தொழில்நுட்பம் மற்றும் கலைவண்ணம்

பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான போட்டியாக இந்த விழா அமைந்தது. 'ஃபிராங்கண்ஸ்டைன்' திரைப்படம் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு (Production Design) ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்று தனது கலை நுணுக்கத்தை நிரூபித்தது.

அனிமேஷன் உலகம்

சிறந்த அனிமேஷன் திரைப்படமாக 'கே பாப் டிமன் ஹண்டர்' தேர்ந்தெடுக்கப்பட்டது. குறும்படப் பிரிவில் 'தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ்' விருதை வென்றது. ஒரு ஆச்சரியமான நிகழ்வாக, 'சிறந்த அதிரடி குறும்படம்' (Live Action Short) பிரிவில் 'தி சிங்கர்ஸ்' மற்றும் 'டு பீபுள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா' ஆகிய இரண்டு படங்களுக்கு விருது பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆஸ்கர் வரலாற்றில் இது 7-வது முறையாகும்.


சிறந்த சர்வதேச திரைப்படம்

நார்வே நாட்டின் உணர்ச்சிகரமான டிராமா திரைப்படமான 'சென்டிமென்டல் வேல்யூ' (Sentimental Value) சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. இதன் மூலம் இயக்குநர் ஜோகிம் ட்ரையர் (Joachim Trier), போட்டியில் இருந்த 'தி சீக்ரெட் ஏஜென்ட்', 'இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்', 'சிராத்' மற்றும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜாப்' ஆகிய படங்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த மகுடத்தைச் சூடியுள்ளார்.

சிறந்த திரைப்படப் பரிந்துரை - பால் தாமஸ் ஆண்டர்சன்

இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் சமீபத்திய அமெரிக்கக் காவியமான 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) சிறந்த திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அராஜக நகைச்சுவை மற்றும் தீவிரமான அரசியல் பதற்றங்களை ஒன்றிணைத்து, புரட்சி மற்றும் வாரிசுரிமை குறித்த ஒரு விசித்திரமான அதேசமயம் அவசரமான பிம்பத்தை இந்தப் படம் இருந்தது

சிறந்த ஒளிப்பதிவாளர் விருது

ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography) பிரிவில் விருது வென்ற முதல் பெண் என்ற சாதனையை ஆட்டம் டூரால்ட் அர்காபா (Autumn Durald Arkapaw) படைத்துள்ளார். இயக்குநர் ரயான் கூக்ளரின் 'சின்னர்ஸ்' (Sinners) படத்திற்காக ஆட்டம் டூரால்ட் அர்காபா சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இதன் மூலம், ஆஸ்கர் வரலாற்றில் ஒளிப்பதிவு பிரிவில் விருது பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.


சிறந்த பட தொகுப்பு

படத்தொகுப்பிலும் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' வெற்றி பெற்றுள்ளது. பால் தாமஸ் ஆண்டர்சனின் காவியப் படைப்பான 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரமாக, அதன் படத்தொகுப்பாளர் ஆண்டி ஜர்கென்சன் (Andy Jurgensen) சிறந்த படத்தொகுப்பிற்கான (Best Film Editing) ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஆண்டியின் படத்தொகுப்பு பெரும் பலமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒலி விருது

ஜோசப் கோசின்ஸ்கி இயக்கத்தில் உருவான 'F1' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான ஒலி அமைப்புக்காக சிறந்த ஒலி விருதைத் தட்டிச் சென்றுள்ளது. கரேத் ஜான், அல் நெல்சன், க்வெண்டோலின் யேட்ஸ் விட்டில், கேரி ஏ. ரிசோ மற்றும் ஜுவான் பெரால்டா ஆகியோரது குழு இந்த விருதைப் பெற்றுக்கொண்டது.

சிறந்த அசல் இசை : லுட்விக்கின் ஹாட்ரிக் சாதனை

ரயான் கூக்ளர் இயக்கிய 'சின்னர்ஸ்' (Sinners) படத்திற்காக லுட்விக் கோரான்சன் சிறந்த அசல் இசைக்கான (Best Original Score) ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இது அவருக்குக் கிடைக்கும் மூன்றாவது ஆஸ்கர் விருது ஆகும். இதற்கு முன்னதாக, ரயான் கூக்ளரின் 'பிளாக் பாந்தர்' மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' ஆகிய படங்களுக்காக அவர் ஆஸ்கர் வென்றிருந்தார்.

சிறந்த திரைப்படப் பரிந்துரை: கிளெபர் மென்டோன்சா ஃபில்ஹோ-வின் 'தி சீக்ரெட் ஏஜென்ட்' (The Secret Agent)

"பயத்தை ஒரு கதையாகச் சொல்வது என்பது, நாம் வாழும் நிஜமான இடங்களில் அந்தப் பயம் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதாகும். அந்த சங்கடமான உண்மையை உடைத்துப் பேசுவதுதான், இந்த ஆண்டில் வெளிவந்த மற்ற சீரியஸான படங்களை விட 'தி சீக்ரெட் ஏஜென்ட்' திரைப்படத்தை மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறது."

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது: 'மிஸ்டர் நோபடி அகெய்ன்ஸ்ட் புதின்' (Mr. Nobody Against Putin)

ரஷ்ய அரசியல் சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'மிஸ்டர் நோபடி அகெய்ன்ஸ்ட் புதின்' திரைப்படம், 98-வது அகாடமி விருதுகளில் 'சிறந்த ஆவணப்படத்திற்கான' (Best Documentary Feature) ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்தப் படத்திற்காக டேவிட் போரென்ஸ்டீன், பாவெல் தாலன்கின், ஹெல்லே ஃபேபர் மற்றும் அல்பெட்டா கராஸ்கோவா ஆகியோர் ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+