புரட்டி போட்ட புயல்! கிழித்தெறிந்த சூறாவளி.. தொடரும் உயிரிழப்புகள்! அவசரநிலையை அறிவித்த அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு காரணமாக தற்போது வரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதிகளில் கடுமையான புயல் வீசும் என்று அந்நாடு வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி ஆகிய மாகாணங்களில் சுமார் 60 சூறாவளி உருவாகியுள்ளது. இதனால் இந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள், மரங்கள் என அனைத்தும் சரிந்து விழுந்துள்ளன. இதில் கொடுமை என்னவெனில் வடக்கு இல்லினாய்ஸில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சுமார் 260 பேர் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி தாக்கியதில் தியேட்டர் இடிந்து விழுந்திருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். 28க்கும் அதிமானவர்க்ள படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கிழக்கு ஷெர்மன் பகுதியில் சூறாவளி தாக்கியதில் 3 பேர் பேர் உயிரிழந்தனர். ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், இந்தியானா மற்றும் டென்னசி தவிர மற்ற பகுதிகளில் சூறாவளி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "நான் இந்த பகுதியில் 1985ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வருகிறேன். ஆனால் இந்த சூறாவளியானது இந்த பகுதியை அடையாளம் தெரியாத பகுதியாக புரட்டி போட்டிருக்கிறது. சூறாவளியின் தாக்கத்திற்கு பின்னர் நான் எங்கு இருக்கிறேன் என்பதையே என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம்தான் கடும் மழை காரணமாக பழமையான சுவர் இடிந்து விழுந்ததில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள் மற்றொரு சோக சம்பவம் அரங்கேறியிருப்பது அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர் புயல் பாதிப்பு காரணமாக ஆர்கன்சாஸ் பகுதியில் அவசர நிலையை ஆளுநர் அறிவித்துள்ளார். இதனையடுத்து மிசோரியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், எனவே மக்கள் கவலையடைய வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications