Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆழ்ந்த விண்வெளிக்கு அனுப்பப்படும்.. 4 அமெரிக்க அதிபர்களின் "டிஎன்ஏக்கள்".. ஆஹா மிகப்பெரிய பிளான்!

முதல்முறை அதிபர்களின் டிஎன்ஏக்கள் இப்படி விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த நான்கு முன்னாள் அதிபர்களின் டிஎன்ஏக்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளன. இந்த டிஎன்ஏக்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த செலெஸ்டிஸ் என்ற நிறுவனம்தான் இந்த டிஎன்ஏக்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. இந்த நிறுவனம் மெமோரியல் விண்வெளி பயணத்திற்கு பெயர் போன நிறுவனம் ஆகும். அதாவது விண்வெளி பயணத்தில் இவர்கள் நினைவு தினத்தை உட்புகுத்தி உள்ளனர்.

அதாவது ஒருவரின் நினைவாக விண்வெளியில் பல்வேறு நிகழ்வுகளை இவர்கள் மேற்கொள்வார்கள். அந்த வகையில்தான் தற்போது இந்த நிறுவனம் மாஸ் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

மாஸ் திட்டம்

மாஸ் திட்டம்

அதன்படி அந்த டெக்சாஸ் நிறுவனம் தற்போது அமெரிக்காவை சேர்ந்த 4 முன்னாள் அதிபர்களின் டிஎன்ஏக்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. ஜார்ஜ் வாஷிங்டன், டுவைட் டி. ஐசனோவர், ஜான் எஃப். கென்னடி மற்றும் ரொனால்ட் ரீகன் ஆகியோர் டிஎன்ஏக்களை இவர்கள் விண்வெளிக்கு அனுப்பி உள்ளனர். அதேபோல் ஸ்டார் ட்ரேக் தொடரில் நடித்து மரணம் அடைந்த பல பிரபல நடிகர்களின் உடல்களையும் இவர்கள் விண்வெளிக்கு அனுப்ப உள்ளனர். இவர்களின் உடல் டிஎன்ஏக்களை எடுத்து அதை விண்வெளிக்கு ராக்கெட்டில் அனுப்புவார்கள்.

எப்படி ?

எப்படி ?

United Launch Alliance Vulcan rocket என்ற ராக்கெட் மூலம் உள்ளே ஒரு கேப்ஸ்யூல் வைத்து இதை விண்வெளிக்கு அனுப்புவார்கள். அந்த கேப்ஸ்யூல் விண்வெளியில் திறந்து விடப்படும். ஒரு நாட்டின் அதிபரின் டிஎன்ஏ விண்வெளிக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். அந்த 4 அதிபர்களின் நகம், முடி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய டிஎன்ஏ விண்வெளிக்கு செலுத்தப்படுகிறது. இந்த டிஎன்ஏ மாதிரிகள் அவர்களுடையது என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் மாதிரிகளை சேகரித்து வைத்த ரகசியமான நபர் ஒருவர்தான் இதை அந்த நிறுவனத்திடம் இலவசமாக வழங்கி உள்ளார். பிரபலங்களின் முடிகளை Louis Mushro என்ற நபர் 2014 வரை உலகம் முழுக்க பல பிரபலங்களின் முடிகள் மற்றும் நகங்களை சேகரித்து வந்தார். அவர்தான் இந்த முடிகளையும் சேகரித்து வந்துள்ளார்.

முடிகள்

முடிகள்

பிரபலங்களின் முடிகளை Louis Mushro என்ற நபர் 2014 வரை உலகம் முழுக்க பல பிரபலங்களின் முடிகள் மற்றும் நகங்களை சேகரித்து வந்தார். அவர்தான் இந்த முடிகளையும் சேகரித்து வந்துள்ளார். அவரிடம் இதை அதிக விலை கொடுத்து வாங்கிய நபர் ஒருவர்தான் தற்போது இலவசமாக முடிவுகளை செலெஸ்டிஸ் நிறுவனத்திடம் வழங்கி உள்ளார். அமெரிக்க அதிபர்களை பாராட்டும் விதமாக, அவர்களை புகழும் விதமாக, அவர்களின் நினைவுகளை பறைசாற்றும் விதமாக இந்த டிஎன்ஏ விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அதிக விலை

அதிக விலை

இந்த டிஎன்ஏ சாம்பிள்கள் பல காலமாக குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகளில் உள்ளது. விண்வெளியில் 150 மில்லியன் கிமீ தொலைவில் இந்த கேப்ஸ்யூல்கள் விடப்பட உள்ளன. அதாவது ஆழ்ந்த விண்வெளிக்குள் இந்த டிஎன்ஏ அனுப்பப்பட உள்ளது. விண்வெளியில் இவர்களின் அஸ்தியை கரைப்பது போல விண்வெளியில் டிஎன்ஏவை கரைப்பதற்காக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது புதிய விண்வெளி திட்டமாக, பிஸினஸாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+