"உறுப்பை" அறுத்தெடுத்த பெண்.. இந்தம்மாவுக்கு 46 வயசாகுது.. 560 சடலங்களுடன்.. அமெரிக்காவே ஆடிப்போச்சு
560 சடலங்களை வெட்டி உறுப்புகளை விற்ற பெண் அமெரிக்காவில் கைதாகி உள்ளார்
நியூயார்க்: 46 வயதான பெண் செய்த காரியத்தை கண்டு, அமெரிக்காவே நடுங்கி போய் கிடக்கிறது.. ஈவிரக்கம், மனிதாபிமானம், கருணை, நேசம், அன்பு, போன்றவைகளின் மறுஉருவமாகவே பெண்கள் பார்க்கப்பட்டு வந்தநிலையில், சமீபகாலமாக அந்த மதிப்புகள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது.. அதற்கு உதாரணமாக இந்த சம்பவத்தையும் சொல்லலாம்.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியை சேர்ந்தவர் மேகன் ஹெஸ்.. 46 வயது பெண் இவர்.. கொலராடோவின் மாண்ட்ரோஸில் சொந்தமாக ஒரு பிசினஸ் நடத்தி வந்துள்ளார்.. சன்செட் மேசா என்ற இறுதி சடங்கு செய்யும் பிசினஸ்தான் அது..
அதேபோல டோனர் சர்வீசஸ் என்ற உடல் உறுப்பு தான மையத்தையும் மேகன் நடத்தி வந்தார்.. இவருக்கு அவரது 69 வயதான அம்மா ஷெர்லி கோச்சும் உதவியாக வேலைபார்த்து வந்துள்ளார்.

தசைநாண்கள்
அம்மா மகள் இருவரும் சேர்ந்து பல மோசடி வேலைகளை செய்து வந்திருக்கிறார்கள். யாராவது இறந்துவிட்டால், இறுதிச் சடங்கு இல்லத்திற்கு வரும் சடலங்களையும், இவர்கள் திருடி விற்றுள்ளனர்.. போலி நன்கொடையாளர் படிவங்களைப் பயன்படுத்தி திருடி அதை வெளியே விற்றுள்ளனர்... அதோடு போலி ஆவணங்கள் மூலம் தனமாக உறுப்புகளை விற்றுள்ளனர்.. அமெரிக்காவை பொறுத்தவரை சடலங்களில் இருந்து இதயங்கள், சிறுநீரகங்கள், தசைநாண்கள் போன்ற உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்பது சட்டவிரோதமானது... அந்த உறுப்புகளை தானமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டவிதி.

560 சடலங்கள்
அதே நேரம் ஆராய்ச்சி அல்லது கல்வியில் பயன்படுத்துவதற்கு தலைகள், கைகள் மற்றும் முதுகெலும்புகள் போன்ற உடல் பாகங்களை விற்பது கூட்டாட்சி சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.. இந்த பாயிண்ட்டை வைத்து கொண்டுதான், அம்மாவும், மகளும் சேர்ந்து சடலங்களில் உள்ள பாகங்களை அறுத்தெடுத்து, விற்று வந்துள்ளனர்.. பல வருட காலமாகவே இப்படிப்பட்ட மோசடிகள் நடந்து வந்துள்ளது.. மொத்தம் 560 சடலங்களை வெட்டி கூறுபோட்டு விற்றுள்ளனர்.. 2016-2018 ராய்ட்டர்ஸ் புலனாய்வுத் தொடரால் இந்த உண்மை இப்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது..

வெட்டப்பட்ட உறுப்பு
வெட்டி எடுக்கப்பட்ட உறுப்புகளான கால்கள், தலைகள் மற்றும் உடற்பகுதிகளை அறுவைசிகிச்சை பயிற்சி நிறுவனங்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும், மேகன் விற்று பணம் சம்பாதித்து வந்துள்ளார்.. ஆனால், உறுப்புகளை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனங்களுக்கு, அவையெல்லாம் திருட்டு உறுப்புகள், மோசடியாக பெறப்பட்டவை என்பது தெரியாதாம்.. இப்போதுதான் உண்மை தெரியவந்துள்ளது.. அதேபோல் நூற்றுக்கணக்கான குடும்பங்களிடம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்று பொய் சொல்லி அவர்களது உடலையும் வெட்டி, உறுப்புகளை விற்றுள்ளனர்.. அந்த உடல்களுக்கு பதிலாக வேறு உடல்களின் சாம்பலை குடும்பத்தினருக்கு வழங்கிவிடுவாராம் மோசடி பெண் மேகன்.

கூறு போட்ட மகள்
இப்போது விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளதையடுத்து, மேகன் ஹெஸ் மற்றும் அவரது அம்மா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.. பல காலமாக இந்த தவறுகளை ஒப்புக்கொள்ளாத அவர்கள், தற்போது மோசடி குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.. இதையடுத்து மேகன் ஹெஸ்ஸுக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.. 69 வயதான அம்மா ஷெர்லி கோச்சுக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது... சடலங்களை வெட்டுவது முதல் அதில் இருந்து உறுப்புகளை எடுப்பது வரை மேகன் மட்டுமே தனிநபராக எல்லா காரியத்தையும் செய்து வந்தாராம்..!!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications