சீட்டு கட்டாய் சரிந்த 3 மாடி கட்டடம்.. அமெரிக்காவில் 8 பேர் பலி.. கர்ப்பிணி உள்பட தப்பிய 17 பேர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் திடீரென்று 3 அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகி உள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய கர்ப்பிணி உள்பட 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.

new york building collapse

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் என்ற இடத்தில்'பெட்ஃபோர்ட் அவென்யூ' ஏரியாவில் 3 மாடி கட்டடம் அமைந்து இருந்தது. இந்த கட்டடம் 94 ஆண்டுகள் பழமையானது.

கடந்த 1930ம் ஆண்டில் இந்த கட்டடம் கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் இடிந்து விழுந்தது.

இந்த கட்டடத்தின் அருகே புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்திற்குள் தான் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டட பணியில் ஈடுபட்டவர்கள் சிக்கினர். உடனடியாக
தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். கர்ப்பிணி உள்பட 17 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுபற்றி நகர ஆணையர் அமகது திகானி கூறுகையில், ''கட்டடம் சரிந்து விழுந்து விழுந்தபோது அருகே கட்டட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்'' என்றார்.

அதேபோல் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''நேற்று கட்டடம் சரிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்பது தொடர்பாக தேடுதல் பணி நடந்து வருகிறது.

நியூயார்க்கை சேர்ந்த 8 பேர் பலியாகி இருப்பதோடு, 17 பேர் காயமடைந்து இருக்கும் செய்தி அறிந்து என்னுடைய இதயம் உடைந்துபோய்விட்டது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களின் குடும்பத்துடன் என்னுடைய இதயம் உள்ளது. பாதிக்கப்பட்ட இடத்தை விட்டு அனைவரும் தூரமாக இருக்க வேண்டும்.

யாராவது உதவி தேவை என்றால் 311 என்ற எண்ணை அழைக்கலாம். நியூயார்க்கில் வெளியே இருப்பவரகள் என்றால் 212 - 639-9675 என்ற எண்ணை அழைக்கலாம்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+