வானியல் அதிசயம்.. பூமியை கடந்து சென்ற ஒரு மைல் அகலமுள்ள கோள்.. நாசா வெளியிட்ட புகைப்படம்
நியூயார்க்: பூமிக்கு நெருக்கமாக மேலே வந்து கடந்து சென்ற ஒரு மைல் அகலமுள்ள சிறிய கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
Recommended Video
1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய கோள்தான் 1998 OR2 . ஒரு பெரிய விண்கல் போன்று காணப்பட்ட இந்த சிறிய கோள் 1,.8 கிலோமீட்டர் நீளம் 4.1 கிலோமீட்டர் அகலத்துடன் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
இந்த பெரிய விண்கல் மாதிரியான கோள்கள் பூமியில் மோதினால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் இருந்தது. இதையடுத்து இந்த 1998 OR2 கோளை நாசா கண்காணித்து வந்தது. ஆய்வில் இந்த சிறிய கோள் பூமியின் மீது மோதாது என்பதை கண்டுபிடித்து அறிவித்தது. ஆபத்தான வகைப்பட்டியலை சேர்ந்த இந்த கோள், பூமிக்கு நெருங்கி வந்து கடந்து செல்லும் என்றும் அறிவித்தது,

நாசா வெளியிட்ட தகவல்
எனினும் அதன் தூரம் என்பது பூமியில் இருந்து நிலவில் உள்ள தூரத்தை விட 16 மடங்கு அதிகம் என்றும் 3.9 மில்லியன் (6.3 மில்லியன் கிலோமீட்டர்) மைல் தொலைவில் இருப்பாகவும் நாசா தெரிவித்தது. இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் கடந்து சென்றது.

நாசா வெளியிட்ட படம்
இந்த கோளின் படங்களை நாசா வெளியிட்டுள்து. இந்த 1998 OR2 கோளை பார்க்கும் போது இதன் அளவு உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவைவிட ந்து மடங்கு என்பத தெரியவந்துள்ளது. 1998 OR2 பூமியை நெருங்கி வந்து கடந்து செல்லும் நிகழ்வை இத்தாலியின் ரோமில் உள்ள ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்தனர். அந்த ஊர் நேரப்படி இரவு நேரத்தில் வானத்தில் பறந்தது

ஆபத்து உள்ளதா
ராட்சத விண்கல்லை போன்ற இந்த 1998 OR2 கோள் பூமியின் மீது மோதவில்லை என்றாலும் எதிர்காலத்தில் எந்த ஒரு சிறிய கோள்களும் பூமியை தாக்காமல் கடந்து செல்லும் என்பதற்கு எந்த உறுதியும் தெரிவிக்க முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.

கணிக்க முடியாது
ஒவ்வொரு வாரமும் 30க்கும் மேற்பட்ட சிறிய விண்கல்களை(கோள்கள்) பூமிக்கு அருகில் விஞ்ஞானிக்ள வந்து செல்வதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகிறார்கள்.அவை எல்லாம் அளவில் மிகச்சிறியவை ஆனால் ஒரு சில சமயங்களில் 1998 OR2 கோள் போல் பெரிய அளவிலான கோள்கள் பூமியை நெருங்கும் .ஆனால் இவற்றால் தற்போதைக்கு பாதிப்புகள் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் கணிக்க முடியாத அளவில் தாக்கத்தை சிறிய கோள்கள் ஏற்படுத்தக்கூடும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications