2 கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு ரூ.7 லட்சம் டிப்ஸ் அளித்த நபர்.. வித்தியாசமான காரணம்!
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டலில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார்.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டலில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார்.
அமெரிக்காவின் சவுத் கரோலினாவின் கிரீன்வைல் நகரத்தில் உள்ளது சப் டாக்ஸ் ஹோட்டல். மிகவும் பிரபலமான இந்த ஹோட்டலில்தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.
அங்கு தண்ணீர் குடிக்க வந்த நபர் ஒருவர் அங்கு வேலை பார்க்கும் பணிப்பெண்ணிற்கு ரூபாய் 7 லட்சத்து 30 ஆயிரம் டிப்ஸ் கொடுத்து இருக்கிறார். இது பெரிய ஆச்சர்யத்தை பலருக்கு ஏற்படுத்தி உள்ளது.

எவ்வளவு டிப்ஸ்
அலைனா கஸ்டர் என்று பணிப்பெண்தான் இந்த பணத்தை பெறுபவர். அங்கு வந்த நபர் இரண்டு கிளாஸ் தண்ணீர் கேட்டு இருக்கிறார். அதை குடித்துவிட்டு தண்ணீர் மிகவும் அருமையாக உள்ளது என்றுள்ளார். அதன்பின் டிப்ஸ் வைக்கும் தட்டில் ரூபாய் 7 லட்சத்தி 30 ஆயிரத்தை வைத்துவிட்டு சென்றுள்ளார்.

யார் கொடுத்தது
மிஸ்டர் பீஸ்ட் என்ற நபர்தான் இந்த பணத்தை கொடுத்தது. இவர் ஒரு யூ டியூப் பிரபலம். மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் இவர் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 90 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

ஏன் இப்படி
யாருக்காவது உதவ வேண்டும் என்று இதை செய்ததாக கூறியுள்ளார். மேலும் ஒருவருக்கு உதவும் போது அவர்கள் எப்படி சந்தோசபடுகிறார்கள் என்று பார்க்க ஆசைப்பட்டு இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தை எடுத்த போது அலைனாவின் முகம் எப்படி மாறியது என்பதை இவரின் ஆட்கள் தூரத்தில் இருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

பிரித்துக் கொள்ள போகிறார்கள்
ஆனால் இதற்கு அடுத்து நடந்ததுதான் மிகவும் ஆச்சர்யம். அலைனா கஸ்டர் அந்த பணத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ள போவதில்லையாம். அங்கு பணி செய்யும் சக பணியாளர்களுக்கும் அதை கொடுக்க போவதாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications