இதுதான் ரியல் ஹாலோவீன்! விற்பனைக்கு வந்த உண்மையான மனித மண்டை ஓடு.. அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்
நியூயார்க்: அமெரிக்காவில் ஹாலோவீன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இப்படி இருக்கையில் ஹலோவீன் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் உண்மையான மனித மண்டை ஓடு ஒன்று விற்பனைக்கு வந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் ஹாலோவீன் திருவிழா எப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். இந்த திருவிழாவின்போது மக்கள் பேய் வேடம் அணிந்துக்கொண்டு மற்றவர்களை பயமுறுத்துவார்கள். அதேபோல வீதிகளிலும் கூட்டமாக பேய் வேடம் போட்டுக்கொண்டு மக்கள் ஊர்வலமாக செல்வார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் மனிதர்களின் எலும்பு கூடுகளை போன்ற பொருட்களை அணிந்துக்கொண்டு பயமுறுத்துவார்கள். இந்நிலையில்தான் ஹலோவீன் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் உண்மையான மனித மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது புளோரிடாவில் உள்ள ஹலோவீன் கடையில் பொருட்களை வாங்குவதற்காக மானுடவியலாளர் ஒருவர் சென்றிருக்கிறார். அவருக்கு பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் மனித மண்டை ஓடும் ஒன்று. வழக்கமாக போலியான மண்டை ஓடுதான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை உண்மையான மண்டை ஓடு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதை கண்டு பதறி போன அந்த மானுடவியலாளர் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என கடையை விட்டு வெளியே வந்திருக்கிறார்.
பின்னர் போலீஸுக்கு போன் அடித்து மண்டை ஓடு விவகாரத்தை கூறியிருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கடையில் ரெய்டு நடத்தி மண்டை ஓட்டை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது, "மண்டை ஓடு உண்மை என்பது முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இது இங்கு எப்படி வந்தது? யாருடைய மண்டை ஓடு இது? கொலை செய்யப்பட்டு அந்த உடலின் மண்டை ஓடு இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மண்டை ஓடு சுமார் 75 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். தற்போது வரை விசாரித்ததில் பழைய கிடங்கு ஒன்றிலிருந்து இது எடுக்கப்பட்டதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார். அதேபோல இதில் காயங்கள் ஏதும் இல்லை. மட்டுமல்லாது கடைக்காரர் இதை எங்கும் மறைத்தும் வைக்கவில்லை. எனவே உரிமையாளர் மீதும் குற்றம் இருப்பதைபோல தெரியவில்லை. இருப்பினும் முழுமையான விசாரணை முடிந்த பின்னர்தான் அனைத்தும் தெரிய வரும்" என்று கூறியுள்ளனர்.
ஹாலோவீன் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் உண்மையான மண்டை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டிருப்பது புளோரிடாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications