செர்பியாவில் மோதிய குட்டி சைஸ் விண்கல்.. நாசா எச்சரிக்கை அப்படியே பலித்தது!
நியூயார்க்: விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே, பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்களை நாசா கண்காணித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை செர்பியாவுக்கு அருகே சிறிய விண்கல் ஒன்று விழுந்து வெடித்திருக்கிறது. இந்த விபத்து குறித்து ஏற்கெனவே நாசா எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய உலகம், நம்மை சுற்றியுள்ள சந்திரன், மற்ற அனைத்து கோள்களுமே விண்கற்களால் உருவாக்கப்பட்டதுதான். இப்படி எல்லாவற்றையும் உருவாக்கிய விண்கற்கள்தான், எல்லாவற்றையும் அழிக்கவும் செய்யும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியை ஒரு பெரிய சைஸ் விண்கல் ஒன்று தாக்கியது. இந்த தாக்குதல் காரணமாக டைனோசர் அழிந்துவிட்டது. விண்கல் தாக்கியதால் சுனாமி, எரிமலை வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

மிக குறிப்பாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் ஏற்பட்டது. இது நமது பூமியின் வளிமண்டலத்தை முழுவதுமாக போர்த்திவிட்டது. எனவே சூரிய ஒளி உள்ளே வரவில்லை. அதேபோல, மறுபுறம் பூமியை சூழ்ந்த எரிமலை வெடிப்பு புகை மற்றும் காட்டுத்தீ புகை வெளியேயும் செல்லவில்லை. இப்படியாக சில பத்தாண்டுகள் வரை நடந்தன. இறுதியில் டைனோசர் போன்ற பெரிய நுரையீரல் கொண்ட உயிரினங்கள் மூச்சு திணறி உயிரிழந்துவிட்டன. இந்த அழிவு ஒன்றே, விண்கல் எந்த அளவுக்கு கொடூரமானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
இந்த விஷயம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போது தொடங்கி, இப்போது வரை விண்கற்களை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். பூமிக்கு நெருக்கமாக எந்தெந்த விண்கற்கள் வருகின்றன. அவை பூமியை மோத வாய்ப்பு இருக்கிறதா? அப்படி இருக்கிறது எனில், அதை தடுக்க என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாசா இந்த ஆய்வுகளை தீவிரமாக நடத்தி வருகிறது.
இப்படி இருக்கையில் நேற்று நள்ளிரவில் 70 செ.மீ அளவு மட்டுமே கொண்ட சிறிய விண்கல் ஒன்றை நாசா கண்டுபிடித்தது. இது பூமிக்கு மிக அருகில் வந்திருக்கிறது என்றும், சில மணி நேரங்களில் பூமியை தாக்கும் என்றும் கூறியிருந்தது. ஆனால் சைஸ் சிறியது என்பதால் பாதிப்பு ஏற்பாடு என்றும் கூறியிருந்தது. நாசா கணித்தபடியே நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் செர்பியா நாட்டுக்கு அருகில் இந்த விண்கல் விழுந்தது. 'C0WEPC5' என்று இந்த விண்கல்லுக்கு பெயர் வைத்துள்ளனர்.
நாசா கணித்தபடி சிறிய விண்கல் ஒன்று பூமியில் விழுந்திருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியம் கலந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்களை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications