வட போச்சே! கண்காட்சிக்கு வந்த இடத்தில்.. கலை பொருளை கை தவறி உடைத்த பெண்.. அப்புறம் நடந்த சுவாரசியம்
வட போச்சே! கண்காட்சிக்கு வந்த இடத்தில்.. கலை பொருளை கை தவறி உடைத்த பெண்.. அப்புறம் நடந்த சுவாரசியம்
நியூயார்க்: அமெரிக்காவில் கலைப்பொருட்களை பார்வையிட வந்த பெண்மணி ஒருவர் ரூ.34 லட்சம் மதிப்புடைய கலை படைப்பை தொட்டு பார்க்கிறேன் என்று கூறி கைதவறி கீழே போட்டு உடைத்திருக்கிறார்.
கண்காட்சி, பொருட்காட்சி எங்கு போட்டாலும் முதலில் போய் பார்க்க வேண்டும் என்று ஒரு சிலர் எல்லா நண்பர்கள் வட்டத்திலும் இருப்பார்கள். இவர்களுக்கு இதுதான் பிரதான பணியாக இருக்கும். எதை வாங்குகிறார்களோ இல்லையோ ஆனால் இதுபோன்ற இடங்களுக்கு முதலில் சென்றுவிடுவார்கள். அதன் பின்னர் தங்களுடைய பயணம் குறித்து நண்பர்களிடம் சிலாகித்து பேசுவார்கள். இப்படியொரு பெண்தான் புளோரிடா மாகாணத்தின் மியாமியில் திறக்கப்பட்ட ஒரு கண்காட்சிக்கு சென்றிருக்கிறார்.
இது ஒரு கலைப்பொருட்கள் கண்காட்சி. இங்கு பிரபல கலைஞரான ஜெஃப் கூன்ஸின் கலைப்பொருட்கள் பார்வைக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது. இவருடைய பொருட்களை வாங்குவதற்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை சுமார் ரூ.700 கோடி வரை இவரது படைப்புகள் விற்பனையாகியுள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் ஜெஃப் எவ்வளவு பெரிய கலைஞர் என்று. இப்படி இருக்கையில் இவரின் புதிய கலைப்படைப்புகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கண்காட்சி
வழக்கம் போல இந்த கண்காட்சிக்கு கூட்டம் அலை மோதியது. இக்கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட பெண்ணும் வந்துள்ளார். எல்லோரும் கலைப்பொருட்களை சுற்றி சுற்றி பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, இப்பெண் மட்டும் கலைப்பொருட்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் பொருட்களை பார்த்து சலித்துப்போன இப்பெண்மணி பாதுகாப்பு வளையத்தை கடந்து பொருட்களுக்கு அருகில் சென்று பார்க்க தொடங்கியுள்ளார். இதனை பார்த்த காவலர்கள் இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இருப்பினும் இப்பெண் அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் பொருட்களை பார்த்து ரசித்திருக்கிறார்.

செல்ஃபி
பின்னர் கலைப்பொருட்களை கையில் எடுத்துவைத்து செல்ஃபி எடுத்துள்ளார். காவல்துறையினர் இம்முறை எச்சரித்த நிலையில், இப்பொருட்கள் உண்மையா? அல்லது போலியா? என்பதை தெரிந்துக்கொள்ளவே இப்படி செய்வதாக கூறி அவர்களை சமாதானம் செய்துள்ளார். இப்படியே ஒவ்வொரு பொருளாக கையில் வைத்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென படார் என்று சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்டு திரும்பிய காவல்துறையினருக்கு அதிர்ச்சி. ஏனெினல் அப்பெண்மணி கையில் வைத்திருந்த ஒரு கலைப்பொருளை கீழே தவறவிட்டுள்ளார். அதில் பொருள் சுக்குநூறாக சிதறியுள்ளது.

வட போச்சே
அப்பெண்ணும் 'வட போச்சே' என்கிற பாணியில் நின்றுக்கொண்டிருக்க உடைந்த பொருளை ஊழியர்கள் சேகரித்துள்ளனர். அப்பெண் அவர்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கையில், 'செஞ்சதே போதும் தாயி' என ஊழியர்கள் அவரை கண்காட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இது குறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில், "இப்பெண்மணி ஜெஃப் கூன்ஸின் 'பலூன் நாய்' எனும் பொருளை உடைத்துள்ளார். இது மிகவும் பேமஸான ஒரு கலை படைப்பு. இதன் விலை ரூ.34 லட்சம். ஆனால் என்ன செய்வது அவரை எங்களால் எதுவும் கேட்க முடியாது. ஏனெனில் கண்காட்சியில் உள்ள பொருட்களை நாங்கள்தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இன்சூரன்ஸ்
என்னங்க இவ்வளவு விலையுயர்ந்த பொருளை உடைத்திருக்கிறார்கள், போனா போகட்டும்னு விட்டுட்டீங்களே என பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, "நாங்கதான் இன்சூரன்ஸ் செஞ்சு வைச்சுடோமே" என்று மயில்சாமி பாணியில் கூலாக பதிலளித்துள்ளார் கண்காட்சியின் ஊழியர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications