ஒரே மாதத்தில் 2வது முறையாக லக்.. மீண்டும் விழுந்த லாட்டரி பரிசு! அமேசான் ஊழியருக்கு இப்படியொரு யோகமா
இந்த லாட்டரி வெற்றி குறித்து பரபரப்பான பேச்சுக்கள் அடிப்பட்டுள்ள நிலையில், இது இவருக்கு முதல் பரிசு கிடையாது என்பதுதான் சிறப்பு செய்தி.
நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஊழியர் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை லாட்டரியில் லட்சக்கணக்கில் பரிசு வென்று அசத்தியிருக்கிறார்.
மேரிலாந்தின் பால்டிமோர் நகரைச் சேர்ந்த 56 வயது நபர் அமேசானில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இது முதல் வேலை கிடையாது. இதற்கு முன்னர் பல வேலைகளை செய்திருக்கிறார். அவையெல்லாம் ஒரு கட்டத்தில் போர் அடித்துவிடவே தற்போது இந்த இடத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ஆனால் இதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பு வாய்ந்ததாக இல்லை. செய்ததையே திரும்ப திரும்ப ஒரு ஒழுங்கு முறையில் செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.
எனவே சீக்கிரமே இந்த வேலையும் இவருக்கு போர் அடித்துவிட்டது. வயதும் 56 ஆகிவிட்டதால் வேறு இடத்திலும் எளிதில் வேலை கிடைக்காது. ஆகவே வேறு வழியின்றி அமேசான் வேலையில் தொடர்ந்து நீடித்து வந்திருக்கிறார். அலுப்பை போக்கிக்கொள்ள மதுக்கடைகளுக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல நேற்று மாலை மதுக்கடையில் குடித்துள்ளார். மதுக்கடையே கூச்சலும், கேளிக்கையுமாக இருக்க இவருக்கு மட்டும் அந்த சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு மன வெறுப்பில் இருந்துள்ளார்.

லாட்டரி
கடைசியாக பில்லை கட்டிவிட்டு வெளியேற எத்தனிக்கையில் லாட்டரி சீட்டு இருப்பதை பார்த்து ரூ.400 கொடுத்து ஒரு சீட்டை வாங்கியுள்ளார். நம்ம ஊர் லட்டரி சீட்டு போல எண்கள் அதில் வெளிப்படையாக இருக்காது. எனவே ஒரு நாணயத்தை கொண்டு சீட்டை சுரண்ட ஒவ்வொரு எண்ணாக தெரிய வந்துள்ளது. சீட்டில் இருந்த எண்ணும் லாட்டரி விற்பனை மையத்திலிருந்த எண்ணும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது. முதலில் அவர் இதனை நம்பவில்லை. போதையில் இருப்பதால் நம்பர் மாற்றி சொல்லிவிட்டோம் என்று நினைத்துக்கொண்டுள்ளார்.

வெற்றி
ஆனால் லாட்டரி சீட்டு கடைக்காரர் இதனை உண்மைதான் என்று சொன்னவுடன் அடித்த சரக்கெல்லாம் இறங்கி லாட்டரி போதை முழுவதுமாக ஏறியுள்ளது. இதே உற்சாகத்துடன் அவர் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் மனைவி இதனை நம்பவில்லை. அதிகமாக குடித்ததில் மூளை குழம்பிவிட்டது என்று கூறியுள்ளார். அவரை கையோடு லாட்டரி சீட்டு கடைக்கு அழைத்து வந்து காட்டியபோதுதான் பரிசு விழுந்திருப்பது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசின் மூலம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.41 லட்சமாகும்.

இதற்கு முன்னரும்
தற்போது தம்பதியினர் இந்த தொகையை கொண்டு என்ன வாங்கலாம் என யோசனையில் மூழ்கியுள்ளனர். புதிய கார், வீடு, சுற்றுலா திட்டம் அல்லது தனது 60வது பிறந்த நாள் கொண்டாட்டம் என கொண்டாட்டங்களுக்கான பட்டியல் நீண்டிருக்கிறது. இந்த லாட்டரி வெற்றி குறித்து பரபரப்பான பேச்சுக்கள் அடிப்பட்டுள்ள நிலையில், இது இவருக்கு முதல் பரிசு கிடையாது என்பதுதான் சிறப்பு செய்தி. என்னங்க சொல்றீங்க இது முதல் பரிசு கிடையாதுன்னா அப்போது எது முதல் பரிசு என வெளியூர் ஆட்கள் கேள்வியெழுப்ப, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதே மதுக்கடையில் லாட்டரி பரிசாக சுமார் ரூ.24 லட்சத்தை இந்த நபர் வென்றிருக்கிறார் என்பதை உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.

அடுத்து என்ன ப்ளான்
அப்படின்னா இவரு ராசியான கைதான் என்று மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதுவரை மொத்தமாக இவருக்கு ரூ.65 லட்ச லாட்டரியில் கிடைத்துள்ளது. இதிலிருந்து ரூ.1 லட்சம் வரை வரியாக பிடிக்கப்படும். அதேபோல ரூ.1 லட்சம் சம்பந்தப்பட்ட கடைக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டு முறை லட்சக்கணக்கில் ஒருவர் பரிசை வென்றிருப்பது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications