உல்லாச கப்பலில்.. 61 வயசுல அமேசான் ஓனருக்கு கல்யாணம்.. பொண்ணு யார் தெரியுமா? யார் யாருக்கு அழைப்பு?
நியூயார்க்: உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பிரபலத்தின் திருமணம் விரைவில் நடக்க போகிறது.. ஆம், 2வது திருமணம் செய்யப்போகிறார் 61 வயது அமேசான் ஓனர்.. முதல் மனைவியை டைவர்ஸ் செய்திருந்த நிலையில், தன்னுடைய காதலியை கரம் பிடிக்க போகிறார்.. இந்த திருமண நிகழ்வுக்கான அழைப்பிதழ்களும் விஐபிக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.. எப்போது திருமணம்? எங்கே திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா?
உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க்.. இவருக்கு அடுத்து 2வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திகழ்ந்து வருகிறார்.. உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடத்தில் இருப்பவர்.

டாப் ஸ்டார் நிறுவனர்
அமேசான் மட்டுமின்றி, விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை தயாரிக்கும் புளூ ஆர்ஜின், அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட், ஐஎம்டிபி., என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி கொண்டிருக்கிறார்.. கிட்டத்தட்ட 235 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான இந்த ஜெஃப்-க்கு இப்போது 61 வயதாகிறது..
மெக்கன்சி ஸ்காட் என்பவருடன் இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால், 2018-ல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.. அப்போது ஒரு கணிசமான பங்குகளையும், அந்த முன்னாள் மனைவிக்கு தந்துவிட்டார். 25 ஆண்டுகள் அந்த மனைவியுடன் குடும்பம் நடத்தியவர்... 4 குழந்தைகளும் இருக்கிறார்கள்..
2வது கல்யாணத்துக்கு ரெடி
விவாகரத்துக்கு பிறகு, தன்னுடைய 2வது கல்யாணத்துக்கு ரெடியானார் ஜெஃப்.. தன்னுடைய நீண்ட நாள் காதலியான லாரன் சான்செஸுடன் திருமணம் நடக்க போகிறது.. கல்யாண பெண்ணுக்கு 55 வயதாகிறது.. இவர் ஒரு டிவி பிரபலம் ஆவார்..
The View, KTTV, Fox போன்ற பிரபல டிவி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர்தான் லாரன் சான்செஸ்.. கடந்த மே 2023ல் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருமணம் நடக்க போவதாக ஏற்கனவே இருவரும் தெரிவித்திருந்தனர்.. அதன்படி, டிசம்பர் 28ம்தேதி இவர்களின் திருமணம் அமெரிக்காவில் நடைபெற உள்ளதாக மீடியாக்களில் செய்திகள் கசிந்தன.
டன்பார் ராஞ்ச் என்ற மாளிகை
ஏனென்றால் எப்போதுமே இந்த காதல் ஜோடி, விடுமுறை என்றாலே அமெரிக்காவின் ஆஸ்பென் நகருக்கு போய்விடுவார்களாம்.. அங்குதான் மகிழ்ச்சியாக விடுமுறையை கழித்திருக்கிறார்கள்..
அதனால், தங்கள் திருமணத்தையும் ஆஸ்பென் நகரிலேயே பிரமாண்டமாக நடத்த முடிவு செய்ததாகவும், இதற்காகவே, ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் என்ற மாளிகையில், $600 மில்லியன் அதாவது 5096 கோடி ரூபாய் செலவில், திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியவண்ணம் இருந்தன.
தடபுடல் திருமண ஏற்பாடுகள்
ஆனால், இந்த செய்திகளை எல்லாம் பெசோஸ் அப்போது மறுத்திருந்தார்.. இந்நிலையில் மீண்டும் ஜெஃப் திருமண சமாச்சாரம் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. ஜெஃப் தன்னுடைய காதலி லாரன் சான்ச்சேஸை மணமுடிக்க உள்ளார்.
அதன்படி, வருகிற ஜூன் 24 முதல் 26ம் தேதி வரை உல்லாச கப்பலில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் ஒரு சொகுசு கப்பலில் இந்த திருமணம் நடக்க போகிறதாம்.
விஐபிகள் யார் யாருக்கு அழைப்பு
திருமணத்துக்கு விஐபிகள் வெறும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர், கிரிஸ் ஜென்னர், கிம் கர்தஷியான், இவா லாங்கோரியா உள்ளிட்ட பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்... அப்படியானால், மணமக்களுக்குப் பிடித்தமான விஷயங்களையும், திருமண நிகழ்வுக்குக்கொண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பானியே ரூ.5000 கோடி செலவில்தான் தன்னுடைய மகனுக்கு கல்யாணத்தை செய்திருந்தார். ஆனால், ஜெஃப், திருமண ஏற்பாடுகளை பார்த்தால் அம்பானியையே மிஞ்சிவிடலாம் என்கிறார்கள்... அதனால், உல்லாச கப்பலில் நடக்க போகும் இந்த திருமணத்தை பலரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி வருகிறார்கள்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications