Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமேசான் ஓனர் அம்பானியை தூக்கி சாப்பிட்ருவாரு போல.. ரூ.5096 கோடியில திருமணம்? மறுத்தபடி ஓடிவந்த ஜெஃப்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: விரைவில் 2வது திருமணம் செய்யப்போகிறார் 60 வயது அமேசான் நிறுவனர்.. இந்த திருமண நிகழ்வை காண பலரும் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் திருமண பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில், அதன் உண்மைத்தன்மை என்ன?

உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் எலான் மஸ்க் வலுவாக இருக்கிறார்.. இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். கிட்டத்தட்ட 235 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரர் இந்த ஜெஃப்.. தற்போது 60 வயதாகிறது..

amazon jeff bezos

மெக்கன்சி ஸ்காட் என்பவருடன் இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு, மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.. இதற்காக ஒரு கணிசமான பங்குகளையும், முன்னாள் மனைவிக்கு தந்துவிட்டார். இப்போது ஜெஃப் பெசோஸ் தன்னுடைய 2வது கல்யாணத்துக்கு ரெடியாகி வருகிறார். தன்னுடைய நீண்ட நாள் காதலியான லாரன் சான்செஸுடன் திருமணம் நடக்க போகிறது.

மணப்பெண்: மணப்பெண்ணுக்கு 54 வயதாகிறது.. இவர் ஒரு டிவி பிரபலம் ஆவார்.. The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல டிவி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர்தான் லாரன் சான்செஸ்..கடந்த மே 2023ல் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருமணம் நடக்க போவதாக ஏற்கனவே சொல்லியிருந்தார்கள்.. இப்போது வரும் சனிக்கிழமை அதாவது டிசம்பர் 28ம்தேதி இவர்களின் திருமணம் அமெரிக்காவில் நடைபெற உள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

எப்போதுமே இந்த காதல் ஜோடி விடுமுறை என்றாலே அமெரிக்காவின் ஆஸ்பென் நகருக்கு சென்றுவிடுவார்களாம்.. எனவே, தங்கள் கல்யாணத்தையும், இதே ஆஸ்பென் நகரில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார்களாம். இந்த ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் என்ற மாளிகையில் இந்த திருமணம் நடக்க உள்ளதாம்.

படுஅமர்க்களம்: $600 மில்லியன் அதாவது நம்ம ஊர் கணக்கில், கிட்டத்தட்ட 5096 கோடி ரூபாய் செலவில், படுஅமர்க்களமாக கல்யாணம் ஏற்பாடுகளை செய்திருக்கிறாராம் ஜெஃப்.. அம்பானியும் ரூ.5000 கோடி செலவில்தான் தன்னுடைய மகனுக்கு கல்யாணத்தை செய்திருந்தார். ஆனால், ஜெஃப், திருமண செலவில், அம்பானியையே மிஞ்சிவிடலாம் என்கிறார்கள்.

உலக பணக்காரர்களில் ஒருவர் என்பதால், இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளக்கூடும், முக்கியமாக, பில் கேட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, ஜோர்டானின் ராணி ரானியா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.. அப்படியானால், மணமக்களுக்குப் பிடித்தமான விஷயங்களையும், திருமண நிகழ்வுக்குக்கொண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவுறுத்தல்: ஆனால், இந்த பிரம்மாண்ட திருமணத்தின் நிகழ்வு ஏற்பாட்டின் முழு விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், அமெரிக்காவில் கல்யாண ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருப்பதாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி இணையத்தில் வைரலாகி பலருக்கும் வியப்பை தந்திருந்தது.. இவ்வளவு ஆடம்பர திருமணமா என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், பெசோஸ் இந்த செய்தியை மறுத்து, இதற்கான விளக்கத்தையும் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் தந்துள்ளார்..

மறுப்பு: "நீங்கள் வாசிக்கும் எல்லாவற்றையும் நம்பி விடாதீர்கள் என்ற பழமொழி இன்றளவில் அதிக உண்மையாக இருக்கிறது. உண்மை ஆடையை அணிந்து புறப்படுவதற்கு முன்பு, பொய்கள் உலகை சுற்றி வந்து விடுகின்றன. அதனால், இதுபோன்ற மக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை மிக எளிதில நம்பி எளிதில் ஏமாந்து விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+