ஜமால்.. சமாதி மீது கைவைத்து உருகிய அமேசான் அதிபர் பெஸோஸ்.. சவுதி சல்மானுக்கு ரகசிய வார்னிங்!
சவுதி மூலம் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் புகைப்படத்தை அமேசான் நிறுவனர் ஜெப் பகிர்ந்து இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நியுயார்க்: சவுதி அரேபியா அரசு மூலம் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் புகைப்படத்தை அமேசான் நிறுவனர் ஜெப் பகிர்ந்து இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போன் ஹேக் செய்யப்பட விவகாரம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ் ஆப் மூலம் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஹேக் செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
அமேசான் அதிபர் ஜெப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்க்டன் போஸ்டில் வெளியான கட்டுரைகளுக்கு பழி வாங்கும் விதமாக இந்த ஹேக்கிங் நடந்துள்ளது. ஆனால் இந்த ஹேக்கிங் விஷயத்தை சவுதி அரசு முற்றாக மறுத்து இருக்கிறது.
|
டிவிட் செய்தார்
இந்த ஹேக்கிங் விஷயம் இணையம் முழுக்க வைரலாகி உள்ள நிலையில், அமேசான் அதிபர் பெஸோஸ், முக்கியமான டிவிட் ஒன்றை செய்துள்ளார். பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி சமாதிக்கு சென்று பெஸோஸ் இந்த புகைபடத்தை எடுத்துள்ளார். பெஸோஸ் ஜமாலின் கசோக்கியின் சமாதி மீது கைவைத்து அஞ்சலி செலுத்தும் புகைப்படம் ஆகும் இது. இதைத்தான் பெஸோஸ் பகிர்ந்துள்ளார். அதோடு ஜமால் என்று உருக்கமாக டிவிட்டும் செய்துள்ளார்.

யார் இவர்
உலகின் சிறந்த பத்திரிக்கையாளர் என்று பார்க்கப்பட்டவர்தான் ஜமால் கசோக்கி. இவர் வாஷிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார். சவுதி சல்மான் குறித்து தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டில் தீவிரமாக கட்டுரைகளை எழுதி வந்தார். இவர் சவுதியை சேர்ந்தவர்தான். சவுதியில் சல்மான் கொடுத்த அழுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறி இவர் அமெரிக்காவில் குடியேறினார்.

கசோக்கி கட்டுரை
கசோக்கி பலமுறை சல்மான் குறித்து கட்டுரைகளை எழுதி உள்ளார். இதை பல முறை சல்மான் மறைமுகமாக தடுக்க முயன்றார். ஆனால் ஜெப் பெஸோஸ் கசோக்கிக்கு ஆதரவாக பேசி வந்தார். சல்மான் செய்த பல தவறுகளை கசோக்கி சுட்டிக்காட்டி கட்டுரையாக எழுதினார். சல்மான் குறித்து தினமும் பல அதிரடி கட்டுரைகளை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. இதுதான் வாஷிங்க்டன் போஸ்ட்டை நடத்தி வந்த அமேசான் நிறுவனர் பெஸோஸ் மீது சல்மானுக்கு கோபம் வர காரணம்.

கொலை செய்தனர்
இதனால் தொடர்ச்சியாக கட்டுரை எழுதி வந்த கசோக்கியை சவுதி முதலில் கொன்றது. அமெரிக்காவில் வசித்து வந்த கசோக்கி கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்த போது கொல்லப்பட்டார். இவரது கொலைக்கும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருப்பது பின் சவுதி மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுவும் உடலை வெட்டி மொத்தமாக அமிலத்தை வைத்து அவரின் உடலை கரைத்து கொன்றனர்.

இதுதான் காரணம்
இதற்கு பின்தான் சல்மான், பெஸோஸ் போனை ஹேக் செய்து, அவரின் புகைப்படங்களை வெளியிட்டார். வாஷிங்க்டன் போஸ்ட் கட்டுரைக்கு பதிலடியாக இப்படி ஹேக் செய்யப்பட்டது. சல்மான் இதன் மூலம் பெஸோஸ் விவாகரத்துக்கு வழி வகுத்தார். தற்போது இந்த ஹேக்கிங் விஷயம் வெளியே தெரிந்து, சல்மான் மொத்தமாக சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார். கசோக்கி விஷயமும் இதனால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

மறைமுக வார்னிங்
உலகமே இதை பற்றி பேச தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சல்மானுக்கு மறைமுகமாக வார்னிங் கொடுக்கும் வகையில்தான் ஜமால் கசோக்கி சமாதியின் புகைப்படத்தை பெஸோஸ் வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். இந்த டிவிட்டிற்கு கீழே பலரும் ஜமால் குறித்த நினைவலைகளை பகிர்ந்து வருகிறார்கள். பலரும் ஜமாலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். சல்மான் செய்த தவறுகளை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று குரல் கொடுத்த வருகிறார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications