அமேசான் நிறுவனத்தில்.. ரோபோக்கள் பணியமர்த்தப்படுகிறதா? உண்மை என்ன? வெளியான விளக்கம்
நியூயார்க்: அமேசான் நிறுவனம் தன் கிடங்குகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதால் பல லட்சம் பேரின் வேலை பறிபோகும் என்று வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களை பாதிக்கும் வகையிலான அது போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமேசான் விளக்கம் அளித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தில் செய்யப்படும் தானியங்கு மயமாக்கல் திட்டத்தால், 2027-க்குள் அமெரிக்காவில் 1,60,000 பேரை புதிதாக பணியமர்த்துவதைத் தவிர்க்க முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. ரோபோக்களின் பயன்பாடு 6,00,000 புதிய பணியாளர்களை நியமிப்பதைத் தடுக்கும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பல லட்சம் பேரின் வேலை பறிபோகும் என்று வெளியான செய்திகளுக்கு அமேசான் நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

அமேசான் நிறுவனம் விளக்கம்
இது தொடர்பாக அமேசான் செய்தித் தொடர்பாளர் கெல்லி நான்டல், "எங்கள் திட்டங்கள் குறித்த முழுமையற்ற மற்றும் தவறான தகவல்களை கசிந்த ஆவணங்கள் பெரும்பாலும் சித்தரிக்கின்றன. இதுவும் அப்படித்தான்.
எங்கள் நிறுவனத்தில் எப்போதுமே ஆயிரக்கணக்கான ஆவணங்கள் புழக்கத்தில் இருக்கும். இவற்றில் ஒவ்வொரு ஆவணமும் வெவ்வேறு அளவிலான துல்லியத்தையும், அர்த்தங்களையும் கொண்டிருக்கும். தற்போது வெளியான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட குழுவின் பார்வையாக மட்டுமே உள்ளன. இது எங்கள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணி நியமன உத்தியை பிரதிபலிக்கவில்லை.. அந்த குழுவிற்கும் பணி நியமனங்களுக்கு தொடர்பு இல்லை.
அமேசான் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் எந்த நிறுவனத்தையும் விட அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது என்பதற்கு புள்ளிவிவரங்களே சாட்சி. அமேசான் தற்போது நாடு முழுவதும் உள்ள செயல்பாட்டு மையங்களில் பணியாளர்களைத் தீவிரமாக நியமித்து வருவதாகவும், விடுமுறை காலத்திற்காக 2.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்தது.
ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் குறித்துப் பேசும்போது, 'ஆட்டோமேஷன்' மற்றும் 'செயற்கை நுண்ணறிவு' போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் என அமேசான் தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மாறாக, எங்கள் செயல்பாட்டு மையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து தொழில்நுட்பங்களின் திறன்கள் மற்றும் நன்மைகளை, குறிப்பாக பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து, உள் தொடர்பு மூலமாக விளக்கப்படுகிறது. அனைத்திலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களை பாதிக்கும் வகையிலான அது போன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமேசான் சார்பாக செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications