இங்கே வராதீங்க.. அமெரிக்காவிற்கும் ஜாதியை கொண்டு சென்ற இந்தியர்கள்.. செனட் உறுப்பினர்கள் கண்டனம்
நியூயார்க்: அமெரிக்காவில் ஜாதி பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்க அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். குஜராத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் நெட்டிசன் ஒருவர் செய்த போஸ்ட் காரணமாக இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
உலகிலேயே இந்தியாவில்தான் சாதிய ரீதியான அடக்குமுறைகள் அதிகம் இருக்கிறது. இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்குள் பாகுபாடு இருந்தாலும், இந்தியாவில் இந்துக்கள்தான் அதிக அளவில் ஜாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சாதியை ஆதரிக்கும் இந்துக்கள், அமெரிக்கவிற்கும் அதை ஏற்றுமதி செய்து இருப்பதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டயலன் பட்டேல் என்ற குஜராத்தை சேர்ந்த அமெரிக்க வாழ் நெட்டிசன் செய்த போஸ்டில், அமெரிக்காவினம் டல்லாஸில் எனது சாதிகான் (லியுவா படிதார் சமாஜ் சாதி) வாலிபால் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்காவில் 40,000 பேர் எங்கள் சாதியினர். அதில் 8,000 பேர் இங்கு உள்ளனர் குஜராத்தின் ஒரு சில பகுதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறோம்.
நாங்கள் கிராமப்புற அமெரிக்காவில் மோட்டல் அல்லது பெட்ரோல் பம்ப் வைத்து உள்ளோம் என்று ஜாதி பெருமையுடன் போஸ்ட் செய்துள்ளார்.

கண்டனம்
ஜாதி பெருமை பேசிய இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்கா அரசியல்வாதிகள் போஸ்ட் செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த அரசியல் ஆலோசகர் Josiah Lippincott செய்துள்ள போஸ்டில், "லியுவா படிதார் சமாஜ்" சாதி என்றால் என்ன, அவர்கள் ஏன் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பதை எனது தாத்தா பாட்டிகளுக்கு எப்படி விளக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று கிண்டலாக கூறி உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் செய்துள்ள போஸ்டில், அமெரிக்கா என்பது தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள வர்க்க வேறுபாட்டை, ஜாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் நாம் சீர்குலைக்க போகிறோம். முறையற்ற குடியேற்றம் காரணமாக அமெரிக்காவின் தேசிய மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது, என்று ஜாதி வெறியை கடுமையாக சாடி உள்ளார்.
அமெரிக்கா சாதி
ஏற்கனவே அமெரிக்காவில் ஜாதி பாகுபாடு தீவிரமாகி இருப்பது எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர்ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர் செய்த கணக்கெடுப்பின் படி இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவில் நிற வேறுபாடு இருக்கிறது. அங்கு கறுப்பின மக்கள் பல காலமாக கொடுமைகளை அனுபவித்து வந்தனர். அதை தடுக்க தற்போது அங்கு கறுப்பின மக்களுக்கு இந்தியாவில் அளிப்பது போல ரிசர்வேஷன் அளிக்கப்படுகிறது. ஆனால் அங்கு சட்டத்தில் ஜாதி குறித்து வரையறை எதுவும் இல்லை. கறுப்பின மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக இருப்பதை போன்ற சட்டங்கள் அங்கே சாதிக்காக இல்லை.
இந்த நிலையில்தான் கென்னத் ஜெ கூப்பர் என்ற பிரபல ஆங்கில பத்திரிக்கையாளர் ''தி வாஷிங்டன் போஸ்ட்'' பத்திரிக்கையில் அமெரிக்காவில் இந்தியர்கள் திணித்த ஜாதி குறித்து கட்டுரை எழுதியுள்ளார். இந்தியர்கள் அமெரிக்காவில் பள்ளியிலும், வீட்டிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் எப்படி எல்லாம் ஜாதியை கடைபிடிக்கிறார்கள் என்று எழுதி விலாவாரியாக தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
America is the “land of opportunity” precisely because we DON’T have a caste system.
— Congressman Brandon Gill (@RepBrandonGill) March 2, 2025
We cannot sustain America’s prosperity and liberty by importing foreign class allegiances.
Immigration without assimilation is national and cultural suicide. https://t.co/ZfLYjweigw
இந்த கட்டுரையை அவர் எழுத்தாளர்கள் தேன்மொழி சௌந்தர்ராஜன் மற்றும் மாரி சிவிக் -மைத்ரேயி ஆகியோர் செய்த கணக்கெடுப்பின்படி எழுதியுள்ளார். அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரிடம் அவர்களின் ஜாதிய பழக்கவழக்கங்கள் குறித்து இவர்கள் கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள். அதேபோல் பட்டியலின சாதியினர் எப்படி எல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். இதை வைத்தே இவர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.
I'm trying to imagine explaining to my great grandparents what the "Leuva Patidar Samaj" caste is and why they're in America. https://t.co/Dh2tF2Kq6k
— Josiah Lippincott (@jlippincott_) March 2, 2025
அதன்படி 3ல் இரண்டு பட்டியலின சாதியினர் தாங்கள் ஒடுக்குமுறைகளை சந்திக்கிறோம், பிறசாதி இந்திய இந்துக்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுகிறார்கள் என்றுள்ளனர். சிறுவர்கள் பள்ளியிலும் இது நடக்கிறது என்று கூறியுள்ளனர். அலுவலகம், வேலைக்கு வெளியே, திருமணம் ஆகிய விஷயங்களில் கூட இப்படி நடப்பதாக இவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த விஷயம் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கென்னத் ஜெ கூப்பர் தெரிவித்துள்ளார்.
-
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications