"அந்த" இடத்திலா?.. நடுராத்திரி கிளினிக் உள்ளே வந்த நோயாளி.. அலறி ஓடிய டாக்டர்.. என்னாச்சு?

ஆணுறுப்பில் டாட்டூ டிசைன் போட்டு வந்தவர் குறித்து டாக்டர் வீடியோ வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நைட் டியூட்டியில் இருந்த டாக்டர், இப்படி ஒரு அதிர்ச்சி தனக்கு அன்றைய தினம் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.. அப்படியே ஷாக் ஆயிட்டார் மனுஷன்..!
வெறும் டிரஸ்களோ அல்லது ஆபரணங்களோ மட்டுமே ட்ரெண்ட்களை உருவாக்குவதில்லை. டாட்டூக்களும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது.

இளைய சமுதாயத்துக்கு இந்த டாட்டூக்கள் மீது நிறைய மோகம் ஏற்பட்டுவிட்டது.. விநோதமான, வித்தியாசமான, பைத்தியக்காரத்தனமான பலவகையான டாட்டூக்கள் பரவி வருகின்றன..

 தொப்புளில்கூட டாட்டூ

தொப்புளில்கூட டாட்டூ

அதிலும், உடம்பில் எங்கு வேண்டுமானாலும் இந்த டாட்டூவை இளைய சமுதாயம் போட்டுக் கொள்கிறது.. கழுத்து, காது, கால், ஏன் தொப்புளில் கூட, ஏராளமான டாட்டூ டிசைன்களை வடிவமைத்து கொள்கிறார்கள். ஆனால், இதுவரை யாருமே செய்யாத காரியத்தை இளைஞர் ஒருவர் செய்துள்ளார்.. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.. அங்குள்ள ஒரு டாக்டர் பெயர் பெஞ்சமின்.. அந்த ஏரியாவில் மிகவும் பிரபலமான டாக்டர்.

 ஆணுறுப்பு

ஆணுறுப்பு

சம்பவத்தன்று, குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில், நைட் டியூட்டியில் இருந்துள்ளார்.. அப்போது இளைஞர் ஒருவர் டாக்டரிடம் வந்துள்ளார். சிறுநீர் கழிக்கும்போது தனக்கு பிறப்புறுப்பிலும், முதுகிலும் வலிக்கிறது என்று சொல்லியிருக்கிறார். பொதுவாக, ஆண்களுக்கு இப்படிப்பட்ட வலிகள் வருவது இயல்பு என்பதால், டாக்டர் பெஞ்சமினும் அவரை செக் செய்து பார்த்துள்ளார்..

 பிறப்புறுப்பு

பிறப்புறுப்பு

இளைஞரின் பிறப்புறுப்பை பரிசோதனை செய்தபோது, அதிர்ந்து போய்விட்டார் டாக்டர் பெஞ்சமின்... அந்த இளைஞனின் பிறப்புறுப்பில் கரும்புள்ளி போன்று தட்டை வடிவில் இருந்துள்ளது.. அதை பார்த்ததும், ஏதோ தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை போலும், அதனால்தான் இப்படி கருப்பாக இருக்கிறது என்று முதலில் நினைத்துள்ளார்.. எத்தனை நாட்களாக, இந்த அட்டை போன்ற கரும்புள்ளி இருந்துள்ளது என்று டாக்டர் கேட்டிருக்கிறார்..

 ஸ்கார்பியோ

ஸ்கார்பியோ

அதற்கு அந்த இளைஞர், "இது டாட்டூ" டாக்டர் என்று சொல்லி சிரித்துள்ளார்.. வியட்நாம் சென்றிருந்தபோது, பிறப்புறுப்பில் Scorpion டிசைனில் இப்படி டாட்டூ போட்டு போட்டுக்கொண்டாராம் இளைஞர்.. இதை கேட்டதும் டாக்டர் மிரண்டு போய்விட்டார்.. அதற்கு இளைஞருக்கு என்ன சிகிச்சை தந்தாரோ தெரியவில்லை.. ஆனால், தான் நைட் டியூட்டியில் இருக்கும்போது, இப்படி ஒரு பேஷன்ட்டை பார்த்து அதிர்ந்து போய்விட்டதாக சொல்லி, இந்த சம்பவத்தை பேசி, வீடியோவும் பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோ இன்னமும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+