காலியான ஆப்பிள் ஷோரூம்.. உள்ளே நுழைந்து செல்போன், லேப்டாப்பை அள்ளி சென்ற அமெரிக்கர்கள்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாகி உள்ளது. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் மாஸ்க் அணிந்த மர்மநபர்கள் ‛ஆப்பிள்' ஷோரூமிற்குள் நுழைந்து பொருட்களை அள்ளி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றி வருகிறார். மேலும் அமெரிக்க குடியேற்றத்துக்கான கொள்கைகளை கடுமையாக்கி உள்ளார்.

amid-of-anti-ice-protest-apple-store-were-looted-in-los-angeles

அமெரிக்க குடியேற்றத்துக்கான கடும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிநாட்டினரை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. இதனை கைவிட வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டுகள் மூலம் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த போராட்டக்காரர்கள் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆப்பிள் ஷோரூமிற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அள்ளி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கண்ணாடி கதவுகளை உடைத்து ஆப்பிள் ஷோரூமிற்குள் நுழைந்த நபர்கள் அங்கிருந்த செல்போன், லேப்டாப் உள்பட ஏராளமான பொருட்களை அள்ளி சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ் வாகனத்தின் சத்தம் கேட்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+