அமெரிக்கத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக.. இந்திய வம்சாவளிப் பெண் செய்த சாதனை!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lily Singh: அமெரிக்கத் தொலைக்காட்சியில் இந்திய வம்சாவளிப் பெண் செய்த சாதனை!- வீடியோ

    நியூயார்க்: இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கனடா நாட்டு பெண், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்க தொலைக்காட்சிகளில் பின்னிரவு நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம். அந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பிரபல நடிகர்களையே அந்நிறுவனங்கள் இதுவரை தேர்ந்தெடுத்து வந்தனர்.

    குறிப்பாக, காமெடி நடிகர்கள் ஜோன் ரிவர்ஸ், சமந்தா பீ உள்ளிட்டோர் தான் இதுவரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர். அரை நூற்றாண்டு காலமாக, முக்கிய நடிகர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர்.

    லில்லி சிங்:

    லில்லி சிங்:

    இந்நிலையில், பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசி, தனது இரவு நேர நிகழ்ச்சிக்கு யூடியூப் சேனல் நடத்தும் கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழிப் பெண் லில்லி சிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. சூப்பர் உமன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் லில்லி சிங்.

    இணையத்தில் பிரபலம்:

    இணையத்தில் பிரபலம்:

    இவரது சேனலுக்கு, ஒன்றரை கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும், இவரது ஒவ்வொரு வீடியோவையும் பல கோடி பார்வையாளர்கள் கண்டு கழிப்பர். இணையத்தில் இவர் மிகவும் பிரபலம்.

    நிகழ்ச்சித் தொகுப்பாளர்:

    நிகழ்ச்சித் தொகுப்பாளர்:

    லில்லி சிங்கை, அமெரிக்க தொலைக்காட்சி தனது பிரபலமான நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக நியமித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், "இந்த நிகழ்ச்சியும் எனது சூப்பர் உமன் சேனல் போன்றது தான். ஒரு இந்திய வம்சாவழி கனடா நாட்டு பெண்ணுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியானது", என கூறியுள்ளார்.

    நள்ளிரவு நிகழ்ச்சி:

    நள்ளிரவு நிகழ்ச்சி:

    "எ லிட்டில் லேட் வித் லில்லி சிங்", என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், நள்ளிரவு ஒரு மணியளவில் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+