இனி இந்தியர்கள் அமெரிக்கா செல்வதையே.. மறந்துடலாம் போல! டிரம்ப் முடிவால் வந்த பெரிய சிக்கல்!
நியூயார்க்: அமெரிக்கா சென்ற இந்தியாவை சேர்ந்த தம்பதிகளுக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் தங்கள் குழந்தைகளைப் பார்க்கச் சென்ற அந்த தம்பதிகளுக்கு , ரிட்டர்ன் டிக்கெட் இல்லாததால் நெவார்க் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.
இருவரும் அமெரிக்காவில் ஐந்து மாதங்கள் தங்கும் திட்டத்துடன் B-1/B-2 வருகையாளர் விசாவில் பயணித்துள்ளனர். ஆனால் டிரம்ப் கொண்டு வந்த புதிய விதிப்படி B-1/B-2 வருகையாளர் விசாவில் பயணிப்பவர்கள் ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது.

அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். இதற்கான கணக்கெடுப்பு பணிகள் மற்றும் ரெய்டுகள் தொடங்கிவிட்டன. இதனால் இந்தியர்கள் பலரும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் முறையாக விசா பெற்று அங்கே வசிக்கும் இந்தியர்களுக்கு இதனால் பிரச்சனை இல்லை.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்களை நாடுகடத்த இந்தியா திட்டம் போட்டுள்ளது. சுமார் 18 ஆயிரம் பேர் முதல் கட்டமாக இந்தியா கொண்டு வரப்படலாம். அமெரிக்காவின் வரி விதிப்பை தடுக்க இந்தியா இந்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பலரை இந்தியா நாடு கடத்த திட்டமிட்டு உள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.
ஆனால் அமெரிக்க வட்டார தகவலின்படி அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர். இவர்கள்தான் அதிக அளவில் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கணக்கெடுப்பு தொடக்கம்:
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளிநாட்டினர் வெளியேற்றப்பட உள்ளனர். அத்துமீறி குடியேறியவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.. இதற்கான கணக்கெடுப்பு இந்திய நேரப்படி நேற்று காலையில் இருந்து நடந்து வருகிறது.
நாடு முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு வந்து உள்ளார். அவரின் உத்தரவின் கீழ் இந்த ரெய்டு தொடங்கி உள்ளது.
எமர்ஜென்சி:
தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள்.
இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே கடந்த ஆட்சியிலேயே அவர் இந்த பகுதியில் எமர்ஜென்சி கொண்டு வந்தார். அதை நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்த நிலையில் அதை வீட்டோ அதிகாரம் மூலம் நீக்கி எமர்ஜென்சியை தெற்கு எல்லை பகுதியில் அமல்படுத்தினார்.
டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார்.
இதை பிடன் - கமலா அரசு தடுக்க தவறிவிட்டதாக புகார்களை வைத்தார். அதிலும் இந்த விவகாரத்திற்கான border czar துறையை கமலா நேரடியாக கவனித்து வந்தார். அவர் எல்லையை பாதுகாக்க தவறிவிட்டார் என்று புகார்களை டிரம்ப் வைத்தார். இப்படிபட்ட நிலையில்தான் தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமித்து உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications