எவனோ நம்ம பயதான்..ஆப்பிள்-ஓபன் ஏஐ விவகாரம்! தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்த எலான் மஸ்க்!
நியூயார்க்: உலக அளவில் மிகப் பெரிய பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் ஆப்பிள் - ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார். இதனால் தமிழர் யாரோ ஒருவர் தான் அவருக்கு இந்த ஐடியாவை கொடுத்துள்ளனர் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

பலமுறை தோல்வி கண்டாலும் தற்போது மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனையில் எலான் மஸ்க் வெற்றி பெற்று வருகிறார். அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை ஏவியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் எலான் மஸ்க் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் ஏதாவது ஒரு நிறுவனத்தை வம்புக்கிழுப்பது எலான் மஸ்குக்கு வழக்கம் தான். அப்படித்தான் ட்விட்டர் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது என குட்டையை குழப்பி பின்பு அதனையே வாங்கி, எக்ஸ் என மாற்றியுள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவான அவர் தினமும் எக்ஸ்-ல் பதிவுகள் போட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது இரு நிறுவனங்களை வம்புக்கு இழுத்துள்ளார் எலான். அப்படி ஆப்பிள் - ஓபன் ஏஐ நிறுவனங்களை தான் அவர் தற்போது சீண்டியுள்ளார். உலக அளவில் மிகப் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன், மேக், ஐபாட் போன்ற சாதனங்களில் ஐஓஎஸ் இயங்கு தளத்தை பயன்படுத்தி வருகிறது. அதில் google போன்ற பெரிய நிறுவனங்களின் அப்ளிகேஷன்களை கூட ஆப்பிள் போன்களில் பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் உலக அளவில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஓபன் ஏஐ நிறுவனமும் ஆப்பிள் நிறுவனமும் இணைய இருப்பதாகவும், மேக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சிஇஓ டிம் குக் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை ரீட்வீட் செய்துள்ள எலான் மஸ்க் ஆப்பிள் சாதனங்களில் ஓபன் ஏஐ டூல் பயன்பாட்டுக்கு வந்தால் அந்த சாதனங்களை தனது நிறுவனங்களில் பயன்படுத்த தடைவிதிப்பதாக கூறினார்.

மேலும் தனிமனித தரவுகளுக்கான பாதுகாப்பு காரணமாகவே ஆப்பிள் சாதனங்களை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் ஓபன் ஏஐ அதன் சாட் ஜிபிடி ஜெனரேட்டிவ் மாடலை ஆப்பிள் சாதனங்களில் பயன்படுத்தினால் அதனை தயார் செய்வதற்காக வாடிக்கையாளர்களின் தரவுகளை ஷேர் செய்ய வேண்டும் எனவும், இதனால் ஆப்பிள் பயனாளர்களின் தனி உரிமை பாதிக்கப்படும் எனவே இது ஏற்றுக் கொள்ள முடியாதது என எலான் கூறியிருந்தார். ஆப்பிள் நிறுவனமும் ஓபன் ஏ ஐ நிறுவனமும் இணைவது குறித்து எக்ஸில் பல வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் தான் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மீம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தப்பாட்டம் படத்தில் நாயகனும் நாயகியும் இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் போஸ்டர் அப்போது அதிகமாக பகிரப்பட்டது. இந்த மீமை தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் எலான் மஸ்க்குக்கு இந்த மீமை பகிர்ந்து இருப்பார்கள் என்கின்றனர் நெட்டிசன்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் தமிழ் டெக்கியான அசோக் எல்லுச்சாமியை எலான் மஸ்க் புகழ்ந்திருந்த நிலையில் அவர்தான் இந்த ஐடியாவை கொடுத்து இருப்பார் எனவும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications